ஒடிசா முதல்வரின் சொத்துப்பட்டியல் வெளியீடு

இம்மாநிலத்தின், முதல்வர் அலுவலகத்தின், அதிகாரப்பூர்வ இணையதளத்தில், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில், 2020-2021ம் நிதியாண்டில், நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு, ரூ.64.97 கோடி என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவரின் சொத்து மதிப்பு, கடந்த, டிசம்பர் மாத நிலவரப்படி, ரூ. 65.40 கோடி ரூபாய் எனவும், அவருக்கு, கடன்கள் இல்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி, புவனேஸ்வரர், ஹிஞ்சிலிகட், பர்கார் ஆகிய இடங்களில் உள்ள, வங்கிகணக்குகள், நகைகள், கார்கள் உள்ளிட்ட, அசையும் சொத்துக்கள் மதிப்பு, ரூ.12.52 கோடி என, குறிப்பிடப்பட்டுள்ளது.
அசையா சொத்துக்களில், புவனேஸ்வர் விமான நிலையம் அருகே உள்ள, நவீன் பட்நாயக்கிற்கு சொந்தமான, நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு, ரூ.9.52 கோடி எனவும், டில்லியில், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சாலையில் உள்ள, ரூ. 43.36 கோடி மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு சொந்தமானது எனவும் கூறப்பட்டுள்ளது.
ரூ. 1 கோடி அளவுக்கு, வங்கியில் டிபாசிட்களும், ரூ. 9 கோடி மதிப்பில், ரிசர்வ் வங்கி பத்திரங்களும், ரூ. 1.50 கோடி மதிப்பிலான, அஞ்சலக சேமிப்புகளும், டில்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில், ரூ.70 லட்சமும், புவனேஸ்வரில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியில், ரூ.21 லட்சமும், நவீன் பட்நாயக் வைத்துள்ளார்.

மேலும், ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான, தங்க நகைகளையும், ரூ. 6.434 மதிப்பிலான, 1980 மாடல் காரும், நவீன் பட்நாயக்கிடம் உள்ளது.
நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில், அமைச்சர் அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ராணேந்திர பிராதப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்வினி பத்ரா ஆகிய, 14 பேர் கோடீஸ்வரர்கள் என, அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் வரிசைப்பட்டியில், உருக்கு, சுரங்கத்துறை அமைச்சர் பிரபுல்லா மாலிக் மட்டும், ரூ.42 லட்சத்துடன் குறைவான வசதி கொண்டவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (8)
இப்ப்ப்டியெல்லாம் செஞ்சி எங்களை மாட்டிவிடமுடியாது திராவிட மாடல இதெல்லாம் செய்ய வஷி இல்லை யாரும் சும்மா கனவு காணாதீங்க
இங்கு தமிழ் நாட்டில் கழக வட்ட செயலாளர் கூட இதை விட பல மடங்கு அதிகமான சொத்து வைத்து இருப்பார்கள்.
நம்பக்கூடிய அளவில் உண்மையான தகவல்களை சொல்லியிருக்கிறார் . நமது தமிழக திராவிட மாடல் மொதல்வர் மற்றும் அவருடைய சகாக்களான தமிழக அமிச்சர்களுடைய உண்மையான சொத்து விவரங்களை வெளியிடுவார்களா . அப்படி உண்மையான தகவல்படி உள்ள சொத்துக்களை தவிர்த்து மீதி உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழக கஜானாவில் சேர்க்க வேண்டும்
நம்பக்கூடிய அளவில் உண்மையான தகவல்களை சொல்லியிருக்கிறார் . நமது தமிழக திராஆஆவிட மாடல் மொதல்வர் மற்றும் அவருடைய சகாக்களான தமிழக அமிச்சர்களுடைய உண்மையான சொத்து விவரங்களை வெளியிடுவார்களா . அப்படி உண்மையான தகவல்படி உள்ள சொத்துக்களை தவிர்த்து மீதி உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழக கஜானாவில் சேர்க்க வேண்டும்
தமிழகத்தில் தீம்காவினரின் சொத்துப்பட்டியலை அண்ணாமலைதான் வெளியிட்டுள்ளார். அதற்கே பலர் மானம் போய்விட்டதாக 1500 கோடி கேட்டிருக்கிறார்கள்...