ADVERTISEMENT
கோவை: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில், கோவையில் இன்று(மே 21) செய்தியாளர்களைச் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே நான் பா.ஜ.,விற்கு வந்திருக்கிறேன்.
கோவை தொகுதியில் நிற்பதற்கு கட்சியில் திறமையான பலர் இருக்கிறார்கள். அவர்களை வெற்றி பெறச் செய்வது என் வேலை. மாநிலத் தலைவராக, பாஜ., விற்கு ஒரு தொண்டனாகவே பணியாற்ற நினைக்கிறேன். தமிழகத்தை விட்டு டில்லி அரசியலுக்கு செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணிலேயே என் அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த காரணத்திற்காகவும் டில்லி அரசியலுக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (22)
Good decision. Otherwise, he will loose his deposit
அண்ணாமலை போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது.. உங்க அக்கா தமிழிசைக்கு கவர்னர் பதவியை விட்டு மீண்டும் அரசியல் களம் காண ஆசை வந்து விட்டதா..?? அமித்ஷாவிடம் MP சீட் கேட்டுள்ளாரே..?
Annamalai has come with a purpose to defeat dmk corporate corrupt family. All the best to him
அண்ணாமலை முதல் அமைச்சர் வேட்பாளர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கோட்டர் கோழி பிரியாணி ஐநூறு ஆயிரம் வாங்கி கொண்டு விசுவாசமாக ஓட்டுபோடுபவர் இருக்கும்வரை நல்லவர்கள் போட்டியிட தயங்குவார்கள் . அப்படி போட்டுவிட்டு ஐந்து வருடத்திற்கு புலம்புவார்கள்