குடை கொண்டு போக மறந்து விடாதீர்கள்!: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று(மே 21) ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும்(மே 21) நாளையும்(மே 22) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இன்றும்(மே 21) நாளையும்(மே 22) அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு ஏற்படலாம்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
இப்படி சொல்லி சொல்லி வர்ர மழையை தடுத்து நிறுத்திறிங்களே
மழை வரும் னு நீங்க news போட்டா rain வர மாட்டேங்குது. நான் என்னோட சின்ன வயதில் இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்.
வெயில் மண்டிய போலந்து தண்ணீர் ஊத்துது .. மழை...வருது மண்ணு வருதுன்னு ..போங்க போங்க