"எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பார்லி., தேர்தலில் பாஜ., தோற்கும்": சொல்கிறார் கெஜ்ரிவால்
புதுடில்லி: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், வரும் பார்லி., தேர்தலில் பாஜ., தோற்கும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை, அவரது வீட்டில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். பா.ஜ.,வுக்கு மாற்றாக அணி அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கெஜ்ரிவாலை நிதிஷ்குமார் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் நிதிஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:
டில்லிக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற உத்தரவை மறுத்து மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்த விவகாரத்தில், டில்லி மக்களுடன் தான் துணை நிற்பதாக நிதிஷ் குமார் கூறினார்.
மத்திய அரசு இந்த அவசரச் சட்டத்தை மசோதாவாக கொண்டு வரும் பட்சத்தில், பா.ஜ., அல்லாத அனைத்துக் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், வரும் பார்லி., லோக்சபா தேர்தலில் பாஜ., தோற்கும். அப்படி நடந்தால், 2024ல் பா.ஜ., அரசு வெளியேறும். இவ்வாறு அவர் கூறினார்.
நிதிஷ் குமார் கூறுகையில், டில்லி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் எவ்வாறு பறிக்கப்படும்?. இது அரசியலமைப்புக்கு எதிரானது. நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக நிற்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (34)
முன்பு எல்லாம் கோவிலுக்கு சென்றால் இறைவா அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், நன்கு மழை பெய்யவேண்டும் என்று வேண்டிகொள்வோம். ஆனால் இந்த கொடுங்கோல் விடியல் ஆட்சியில், இறைவா மக்களை சாராயம் குடிக்காமல் பார்த்துக்கொள், மக்களை திமுக ரவுடிகளிடம் இருந்து காபாற்று, என் நிலத்தை திமுக கவுன்சிலர்களி்டம் இருந்து காப்பாற்று, கரண்ட் கட் ஆவாமல் பார்த்துக்கொள், ஹிந்தகளை திமுகவிடம் இருந்து காப்பாற்று என்று வேண்டி கொள்ளும் நிலைக்கு வந்துள்ளோம்.
தேசத்துரோகிகள் ஒன்று சேருவது நாட்டை துண்டாடவே ஆனால் வட இந்தியர்களிடம் இந்த பொய் பிரசாரம் பலிக்காது
புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் பூனைகள்
காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெற்ற கர்நாடகாவில் ஒரு முதல்வர் நாற்காலிக்கு 4-5 நாட்கள் இழுபறி. இதில் அத்தனை எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஜெயித்தால் யார் பிரதமர் என்பதில் ஆரம்பித்து எந்த துறை யாருக்கு என்பது வரை சண்டை தான்.
முன்பு எல்லாம் கோவிலுக்கு சென்றால் இறைவா அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், நன்கு மழை பெய்யவேண்டும் என்று வேண்டிகொள்வோம். ஆனால் இந்த கொடுங்கோல் விடியல் ஆட்சியில், இறைவா மக்களை சாராயம் குடிக்காமல் பார்த்துக்கொள், மக்களை திமுக ரவுடிகளிடம் இருந்து காபாற்று, என் நிலத்தை திமுக கவுன்சிலர்களி்டம் இருந்து காப்பாற்று, கரண்ட் கட் ஆவாமல் பார்த்துக்கொள், ஹிந்துக்களை திமுகவிடம் இருந்து காப்பாற்று என்று வேண்டி கொள்ளும் நிலைக்கு வந்துள்ளோம்.