கள்ளச்சாராயம் விவகாரம்: கவர்னர் ரவியிடம் அண்ணாமலை புகார் மனு

இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக, தமிழக கவர்னர் ரவியை, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜ., தலைவர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில்கூறியிருப்பதாவது: கள்ளச்சாரயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பதுடன். கள்ளச்சாராயம் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக, உயிரிழந்தவர்கள் பட்டியல் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசிடம் கவர்னர் ரவி விளக்கம் கேட்டது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை பேட்டி:
தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கவர்னர ரவியிடம் 2 கோரிக்கையை முன்வைத்துள்ளோம். போலீசார்கள், கவுன்லசிலர் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்குக்கின்றனர். அமைச்சர் ஒருவர் அரசியலமைப்பை மீறினால் கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழகத்தில் போலீசார்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கவர்னர் ரவி நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பாலாறு, தேனாறு போல கள்ளச்சாராயம் ஆறு ஓடுகிறது என கவர்னர் ரவியிடம் கூறியுள்ளோம்.
பாஜ., சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறோம். அந்த வெள்ளை அறிக்கையில்,டாஸ்மாக்கை மூன்று ஆண்டுகளில் வரைமுறைப்படுத்துவது; எப்படி அதை குறைப்பது குறித்த தகவல் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2014-- 2015ம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய, முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.
குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?. உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (35)
எதுக்கு இத்தனை பேரு
சும்மா இருங்க , சாராய ஆற்றை சுத்தப்படுத்தி சொகுசு படகு விட 5000 கோடி ரூபாயில் பதிய திட்டத்தை அறிவித்து விடுவார்
கெவுனருக்கு தெரியாதா? அதான் ஏற்கனவே தலைமை செயலரிடம் அறிக்கை கேட்டிருக்காரே? இவிங்க ஏதோ பெருசா.. போங்க.. நீதிமன்றத்தில் கேஸ் போடுங்க.
போச்சுடா சாமி. இந்த புகைப்படத்தை பார்த்த பின்னர், திரு. துரைமுருகனுக்கு பாயசம் சாப்பிட்டது போல் இருக்கும். கமெண்ட் எப்படி வருகிறது என்று பாப்போம். புரிகிறதா ??
திருட்டு / கள்ள சாராயம் என்பது தவறு ...முறை சாரா சாராயம் என்பதே சரி .......திருட்டு திராவிடம் ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும் ....