Load Image
Advertisement

காலை உணவு திட்டத்தால் சத்துணவு ஊழியர்கள் அவதி

Nutrition staff suffer from breakfast program   காலை உணவு திட்டத்தால் சத்துணவு ஊழியர்கள் அவதி
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள காலை உணவு திட்டத்தால் சத்துணவு ஊழியர்கள் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி மாணவ - மாணவியர் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தவும் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவு திட்டம் அமலாகி உள்ளது.

முதல்வரே துவக்கி வைத்து குழந்தைகளுடன் உணவருந்திய இந்த திட்டம் தி.மு.க.வுக்கு ஓட்டு வங்கியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் இதில் உள்ள குளறுபடிகளால் சத்துணவு திட்ட ஊழியர்கள் அவதியடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பேயத்தேவன் கூறியதாவது:

கிராமங்களில் சத்துணவு மையங்களிலேயே காலை உணவு தயாரிக்கின்றனர். இதற்காக மையங்களின் சாவியை காலை உணவு திட்ட குழுவிடம் வழங்கும்படி கிராம பஞ்சாயத்தார் கட்டாயப்படுத்துகின்றனர். அவர்கள் காலையில் 9:00 மணிக்குள் உணவு வழங்க வேண்டும்.

நாங்கள் 9:30 மணிக்குள் உணவு தயாரிப்பில் ஈடுபட வேண்டும். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய அறையை சுத்தம் செய்து சமைப்பதற்குள் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் ஒரே மையத்தில் அவர்களின் உடைமைகளையும் வைப்பதால் பொருட்கள் குறையவும் வாய்ப்புள்ளது.

தற்போது சத்துணவு மையங்களில் 25 குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் அருகில் உள்ள மையங்களுடன் இணைத்து விடுகின்றனர். ஆனால் ஐந்து குழந்தைகள் இருந்தாலும் காலை உணவு சமைக்கின்றனர். சத்துணவு கூடம் கட்ட 2.5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்படும் நிலையில் காலை உணவு திட்ட கூடம் கட்ட 27.5 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஒதுக்குகின்றனர்.

இந்த திட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினரை இணைத்து வேலைவாய்ப்பு அளிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் ஓரிடத்தில் சமைத்து வேன்களின் வாயிலாக அனைத்து மையங்களுக்கும் உணவு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு இந்த திட்டத்தை பிரதானப்படுத்தி சத்துணவு திட்டத்தை முடக்கவே இந்த வேற்றுமையை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகள் பணி செய்த சத்துணவு ஊழியர்கள் கலக்கமடைந்து உள்ளனர். இவ்வாறு அவர்கூறினார்.


வாசகர் கருத்து (4)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    அஞ்சு நாளைக்கும் போடப் போறது என்னமோ வெறும் உப்புமா.... இதுக்குத் தான் இத்தனை பில்டப்பும்..... ரவை சேமியா கோதுமை ரவை சப்ளையருக்கு கொள்ளை லாபம்..... யாரு அந்த காண்ட்ராக்டருன்னு கண்டுபுடிச்சு வெளியிடனும்.....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    சத்துணவு மையத்தை ஹோட்டல் மாதிரி ஆக்கிட்டாங்க ,பாவம் ..

  • ஆரூர் ரங் -

    அக்ஷய பாத்ரா எனும் தன்னார்வலர் நிறுவனம் இலவசமாக காலைச் சிற்றுண்டி அளிக்க அரசின் ஒத்துழைப்புக் கேட்டு பல மாதங்கள் ஆகியும் அரசு தண்ணீர் இணைப்பு கூட கொடுக்கவில்லை. அரசே செய்ய முயல்வது அபத்தமான வழி. அட்சய பாத்ரா பல மாநிலங்களில் வெற்றிகரமான முறையில்😛 செயல்படுத்தி வரும் தொண்டை புறக்கணிப்பது. சுயநல ஸ்டிக்கர் அரசு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்