Load Image
Advertisement

மோசடி பதிவு பிஎஸ் 4 ரக வாகனங்கள் பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Court orders impoundment of fraudulently registered BS4 vehicles    மோசடி பதிவு பிஎஸ் 4 ரக வாகனங்கள்  பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADVERTISEMENT

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட, 'பிஎஸ் 4' ரக வாகனங்களை பறிமுதல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் 2020 மார்ச் 31க்கு பின், 'பிஎஸ் 4' ரக வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் கூடாது என, உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி, மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் பதிவை ரத்து செய்யும் நடைமுறையை, அவ்வப்போது மாநில போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு செப்., 28ல், சென்னையில் தன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த யுவராஜ் என்பவரின் காரை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த காரை விடுவிக்க உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், யுவராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, '2020 நவ., 1 முதல் 2022 செப்., 22 வரை, 290 'பிஎஸ் 4' ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுஉள்ளன.

போலி ஆவணங்களை வைத்து, 25 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. பதிவை ரத்து செய்யும் நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன.
Latest Tamil News

மனுதாரர், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், வாகனத்தை விற்ற நபர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

நீதிபதி பிறப்பித்தஉத்தரவு:





ஆவணங்களை திருத்தி 'பிஎஸ் 4' ரக வாகனங்களை மோசடி யாக பதிவு செய்ததன் வாயிலாக, பெரியளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.

போக்குவரத்து துறை அதிகாரிகள் துணை இல்லாமல், இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். மோசடியாக பதிவு செய்யப்பட்ட 'பிஎஸ் 4' ரக வாகனங்களின் விபரங்களை, காவல் துறையினருக்கு, போக்குவரத்து துறை கமிஷனர் வழங்கவேண்டும்.

இவ்விபரங்கள் வாயிலாக, அந்த வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, மோசடியில் தொடர் புள்ள நபர்களை அடையாளம் கண்டு, விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும். மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மாநிலத்தில் இயக்கப்படவில்லை என்பதை, டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும்.

மோசடியாக பதிவு செய்த வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தபட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒப்படைக்கும்படி, அனைத்து காவல் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, வாகனத்தை விற்ற நபரின் விபரங்களை, மனுதாரர் தெரிவிக்க வேண்டும்.

இனி இயக்க போவதில்லை என, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உத்தரவாதம் அளித்து, வாகனத்தை பெற்றுகொள்ளலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (2)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    வட்டார R.T.O. அலுவலகமும் உடந்தையாகா செயல் பட்டிருப்பதால் நீதி மன்றம் தயவு தாட்சனையைய்காட்ட கூடாது. அரசை ஏமாற்றும் மோசடி வேலை. வெளியே பயிரய் மேய்வது போன்று கணக்கு காட்டுதல். எதெற்கெடுத்தாலும் ஒன்றிய அரசு என்று கூறும் விடியல் இது போனற ஜில்கா முல்லகா வேலைய்ய செய்வது எதற்கு . விடியலை குன்றிய அரசு என்று அழலைக்கலாமா?

  • போலிமதச்சார்பின்மை - kohima,இந்தியா

    இயக்குவது இருக்கட்டும் விற்றபோது ரெஜிஸ்டர் செய்த அரசு அலுவலருக்கு என்ன தண்டனை யுவர் ஹானர் ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement