கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவிக்காக சித்தராமையாவும், 75, சிவகுமாரும், 61, கடுமையாக மோதினர்; இது, தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வராக இருக்கும்படி, அவர் ஆலோசனை கூறினார். முதலில் சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்கும்படி சோனியா வலியுறுத்தினார். இதன்பின் இருவரும் பரஸ்பரம் சில நிபந்தனைகள் விதித்து, ஆட்சியை பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர்.
முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த சிவகுமார், 'முதல்வருக்கு சமமான அதிகாரம் எனக்கும் வேண்டும். அமைச்சரவையில் என் ஆதரவாளர்களுக்கு அதிகமான இடம் வழங்க வேண்டும். 'அரசில் எந்த முடிவையும், சித்தராமையா தன்னிச்சையாக எடுக்கக் கூடாது. இதை, துணை முதல்வரான என்னிடமும், மற்ற அமைச்சர்களிடமும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்' என, பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதே போன்று சித்தராமையாவும், சிவகுமாரிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். 'இம்முறை கோலார் தொகுதியில் போட்டியிட திட்டமிட்ட நான், மேலிடத்தின் உத்தரவின்படி, வருணாவில் களமிறங்கி வெற்றி பெற்றேன். எனக்காக என் மகன் எதீந்திரா, தொகுதியை விட்டுக் கொடுத்தார். 'எனவே, என் பதவி காலம் முடிந்து, சிவகுமார் முதல்வராகும் போது, எதீந்திராவை அமைச்சரவையில் சேர்த்து, அவருக்கு முக்கியமான இலாகாவை ஒதுக்க வேண்டும்' என, அவர் நிபந்தனை விதித்ததாகவும், அதை சிவகுமார் மற்றும் காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொண்டதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதவியேற்பு விழா
இதற்கிடையே, கர்நாடகாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில், நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவுக்கு நாடு முழுதும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வந்திருந்தனர்.
பகல், 12:30க்கு விழா துவங்கியது. சரியாக, 12:40க்கு, சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அவர், கடவுளின் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவருக்கு, கவர்னர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து சிவகுமார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதன்பின், கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர் பரமேஸ்வரா மற்றும் கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோளி, மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஹிமாச்சல் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு உள்ளிட்டோர், இந்த விழாவில் பங்கேற்றனர். முன்னதாக, விழா மேடைக்கு வந்த ராகுல், சித்தராமையா, சிவகுமார் ஆகியோரின் கைகளை துாக்கிப் பிடித்தபடி, பார்வையாளர்களை நோக்கி கையசைத்தார்.
இதன்பின், சித்தராமையாவும், சிவகுமாரும் பெங்களூரில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த சிவகுமார், தலைமைச் செயலகத்தின் படிக்கட்டில் நெற்றியை வைத்து வணங்கினார்.
முதல்வராக பதவியேற்ற சித்தராமையா, துணை முதல்வராக பதவியேற்ற சிவகுமார் ஆகியோருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
கொள்கை அளவில் ஒப்புதல்
பதவியேற்புக்கு பின், பெங்களூரில் உள்ள தலைமை செயலகத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எட்டு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், தேர்தலில் காங்., அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். முக்கிய ஐந்து வாக்குறுதிகளை செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்படி, 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு 2,000 ரூபாய், 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமா பயின்றவர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை ஆகிய திட்டங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த, அரசுக்கு ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பாக விரிவாக விபரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில், காங்., அரசின் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு, அக்கட்சி தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதில் பங்கேற்றனர். மேலும், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், மேடையில் அனைத்து தலைவர்களும் கைகளை உயர்த்தி காட்டினர். பதவியேற்பு விழாவில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்கவில்லை.
சட்டசபை கூட்டம் கர்நாடகாவில், நாளை முதல் 24ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பர். அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் வகையில், சட்டசபை இடைக்கால சபாநாயகராக, காங்., மூத்த எம்.எல்.ஏ., ஆர்.வி.தேஷ்பாண்டேவை நியமிக்க, கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டசபைக் கூட்டத்தொடரில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (24)
சத்தமில்லாமல் photoவில் விடியலை பின்னுக்கு தள்ளி விட்ட பப்புவும் , பப்பியும் ?
கொள்ளையடித்தாலும் , நாட்டை கூறு போட்டாலும் இந்த இஸ்லாமியர்கள் நான் , என் மதம் , எனக்கு அவர்களே சப்போர்ட் என்று கொள்ளைக்காரர்களுக்கே வோட்டு போடுவார் , அது அவர்கள் கொள்கை .... எந்த கொம்பன் வந்தாலும் அடுத்த லோக் சபா தேர்தலில் மோடி என்ற ஒற்றை மனிதனை தோக்கடிக்க நீங்கள் எதனை கோடி பேர் வந்தாலும் , எதனை தேச துரோகிகள் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகா போவது இல்லை ..... உத்தரபிரதேச , ராஜஸ்தான் , மத்தியபிரதேச , பீகார் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முழுமையாக கைப்பற்றும் - மீண்டும் மோடு பிரதமராகி அரியணை ஏறுவார் ... மலை கு முன்னாள் நீங்களெல்லாம் மடு ..... பிஜேபி தயாராகத்தான் இருக்கிறது , வாருங்கள்
கார்கே மகனை தோற்கடிக்க நரேந்திர தாஸ் தாமோதர் அந்த தொகுதிக்கு மட்டும் தனி கவனம் செலுத்தி பல பல நலத்திட்டங்களை அந்த தொகுதிக்கு என்று அறிவித்தது
சித்து இனி சிவா சிவா என்று ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் சிவாவின் சிவ லீலைகள்ஒவ்வொன்றாக வெளிவரும் சிவாவின் தாண்டவம் காண வேண்டாமா விரைவில் காணுங்கள்
எல்லாமா எல்லாமா உன் புலம்பளை நிறுத்தம்மா