Load Image
Advertisement

" தமிழைத் தேடி பாசமா? எல்லாம் வேஷம்!": முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி


சென்னை: ரூ. 2 ஆயிரம் நோட்டு வாபஸ் குறித்து, முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு, நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம்! என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

Latest Tamil News


ரூ. 2 ஆயிரம் நோட்டு வாபஸ் என்பது கர்நாடக சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை மறைக்க ஒற்றை தந்திரம் என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது: கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம்! எனக் கூறியுள்ளார்.

Latest Tamil News

மேலும், அண்ணாமலை,' என்னிடம் ரூ.2 ஆயிரம் நோட்டு இல்லை. ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெற்றது பண மதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை; மூன்றரை வருடங்களாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை. 2 ஆயிரம் நோட்டு வாபஸால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (31)

  • அப்புசாமி -

    உங்க கிட்டே இரண்டு ரூபாய் நாணயம்.கூட இல்லைன்னு தெரியும் அண்ணாச்சி. உங்களுக்காக செலவு செய்யறவங்க கிட்டேதான் இருக்கும். அவிங்களுக்கு உதவுங்க.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    தமிழ் நாட்டின் நலன் கருதி PTR அவர்களின் முழு ஆடியோ வை வெளியிடவும். யாருக்காகவும் பச்சாதாபம் படக்கூடாது நாட்டின் நலம் முக்கியம். மக்களிடம் மறைப்பது நல்லதல்ல அது ஊழலுக்கு துணை போவது போல ஆகிவிடும்.

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    திமுக்காவை பற்றி பேசினால் மட்டும் போதுமா மக்களின் சிரமம் அல்லது உங்களுக்கு உதவும் நல்லவர்களின் சிரமத்தையும் உணர்ந்து பேசுங்கள் அண்ணாமலை சார்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தி.மு.க வைத் தவிர மற்ற கட்சிகள் நிச்சயம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை நிச்சயம் மாற்றி இருப்பார்கள்....

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    இன்னும் எல்லாம் முடக்கபடுமோ கலி காலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்