Load Image
Advertisement

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்றும்(மே 20), நாளையும் (மே 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Latest Tamil News


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:




தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்றும்(மே 20), நாளையும்(மே 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மே 20) முதல் அடுது்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும்(மே 20), நாளையும்(மே 21)அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Latest Tamil News

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38- -39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28- - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், வரும் மே 23, மற்றும் மே24 ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (1)

  • Godyes - Chennai,இந்தியா

    வானிலை அறிக்கை மேகங்களுக்கு தெரியும்.இடம் மாறி பெய்யும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்