Load Image
Advertisement

மகளை காதலித்த மாணவரை கொலை செய்த தந்தை, தாய், சகோதரன் கைது

Father, mother and brother arrested for murdering student who fell in love with daughter    மகளை காதலித்த மாணவரை கொலை செய்த தந்தை, தாய், சகோதரன் கைது
ADVERTISEMENT
தேனி அருகே பூதிப்புரத்தில் மகளை காதலித்த பிளஸ் 2 மாணவர் கமலேஸ்வரனை 17, கொலை செய்த வழக்கில் தந்தை போடேந்திரபுரம் காளியம்மன் கோயில் தெரு தன்னாசி 50, தாய் தமிழ்செல்வி 45, சகோதரன் ஜெயபிரகாஷ் 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்து தலைமறைவான ராஜ்குமாரை 25, போலீசார் தேடுகின்றனர்.

பூதிப்புரம் பேரூராட்சி வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்த சரவணன், ஊஞ்சலாம்மாள் தம்பதி மகன் கமலேஸ்வரன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றிருந்தார். கடந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத பழனிச்செட்டிபட்டி தனியார் பள்ளிக்கு சென்ற போது தன்னாசியின் 17 வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. பின் அது காதலாக மாறியது. இதற்கு மாணவி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாணவியின் பெற்றோர் ஜன., 12ல் பூதிப்புரத்திற்கு வந்து கமலேஸ்வரனை கண்டித்து அவரது அலைபேசியை பறித்துச் சென்றனர். ஜன., 14ல் தன்னாசியின் வீட்டிற்கு சென்ற மாணவரின் தாய் அலைபேசியை தர கோரினார். இதற்கு, 'அலைபேசியில் உள்ள மகளின் படங்களை அழித்து விட்டு தருவதாகவும், உங்கள் மகன் எங்கள் மகளுடன் பழகுவதை நிறுத்த வேண்டும். இல்லை எனில் கொலை செய்து விடுவோம்,' என தன்னாசி, அவரது குடும்பத்தினர் மிரட்டினர். அதையும் மீறி மாணவர், மாணவியுடன் பழகினார்.

இதனால் ஆத்திரமடைந்த தன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி பூதிப்புரத்திலுள்ள கமலேஸ்வரன் வீட்டிற்கு சென்று அவரையும், தாத்தா சேதுராஜாவையும் கட்டையால் தாக்கினர். அதன் பின்பும் மாணவியுடன் கமலேஸ்வரன் பழகினார்.

இந்நிலையில் மே 14ல் டூவீலரில் வெளியில் சென்ற மாணவர் கமலேஸ்வரன், மறுநாள் பூதிப்புரம் அருகே உள்ள கல்லுருணிக்காடு கிணற்றின் அருகே கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கொலை குறித்து தன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் விசாரித்தார். மூவரும் 'கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை' என மறுத்தனர். தீவிர விசாரணையில் கொலையில் தொடர்புள்ளதையடுத்து தன்னாசி, அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து (4)

  • sankar - Nellai,இந்தியா

    இங்கே சில தலைவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    வளர்த்த பெற்றோர்கள் மனம் என்ன பண்ணும் என நினையுங்கள் டீவி கதை அல்ல மனித வாழ்க்கை. அவர்கள் வாழ்வு வேறு மக்கள் வாழ்வு வேறு அது பணக்காரன் அல்லது ஏழை.எதுவானாலும்

  • Premanathan S - Cuddalore,இந்தியா

    +2மாணவர் செய்தது தவறுதான் . படித்து முன்னேற வேண்டிய வயதில் வேண்டாத வேலை உயிரைப்பறித்துவிட்டது. ஒன்றும் சொல்வதிற்கில்லை. சினிமா, டிவி, தினசரி எங்கும் காதல் போதனை. பள்ளியில் நோ நீதி போதனை

  • sankar - Nellai,இந்தியா

    யோசிக்க மறந்து விட்டவர்கள் - கர்மா - அவ்ளோதான் சொல்லமுடியும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement