சென்னை: பட்டியலின சமுதாயத்தின் ஆதரவு இல்லாவிட்டால், தேர்தலில் தொடர் வெற்றிகள் பெறுவது கடினம் என்று, பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய அளவில் பா.ஜ., பொறுப்பாளராக, ஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச்செயலர் அருண்குமார், இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
அவர், பா.ஜ., தேசிய தலைவர், தேசிய அமைப்பு பொதுச் செயலருடன் மாதம்தோறும் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அதன்படி, சில நாட்களுக்கு முன்பு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோருடன், அருண்குமார் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில் தேசிய இணை அமைப்பு பொதுச்செயலர் சிவ் பிரகாஷ், தேசிய பொதுச்செயலர் சுனில் பன்சால் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். அப்போது, கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதித்துள்ளனர்.
தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பட்டியலின மக்களின் ஓட்டுகள் கிடைக்காதது, மிக முக்கிய காரணம் என்பதை, அருண்குமார் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது:
மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து, தலைவர்களை உருவாக்கிய பின்னரே, பா.ஜ.,வுக்கு தேர்தல்களில் வெற்றி கிடைக்க துவங்கியது.
கடந்த, 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களில், பட்டியலின மக்கள் தொகை, இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதை பா.ஜ., தலைவர்களிடம் சுட்டிக்காட்டி, பட்டியலின மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, தொடர் வெற்றிகளை பெற முடியும் என, ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பட்டியலின மக்களின் ஓட்டுகள் கிடைக்காததற்கு, அம்மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கான பட்டியலின தலைவர் இல்லாததே காரணம். இதை எச்சரிக்கையாக வைத்து, நாடெங்கும் பட்டியலின மக்களின் ஆதரவை பெற வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், மக்கள் செல்வாக்கு மிக்க பட்டியலின தலைவர்களை உருவாக்க வேண்டும்.
பிரதமர் மோடிக்கு பின், பிரதமர் வேட்பாளராக வரும் அளவுக்கு, பட்டியலின தலைவர்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'எதிர்கால அரசியல் சூழலை உணர்ந்தே, மத்திய அமைச்சரவையில் 12 பட்டியலினத்தவர், 8 பழங்குடியினர், 27 பிற்படுத்தப்பட்டோர், 11 பெண்களுக்கு, பிரதமர் மோடி வாய்ப்பு அளித்துள்ளார்.
'தமிழகத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவை, ராஜ்யசபா எம்.பி.,யாக நியமித்தது, அம்பேத்கர் தொடர்புடைய ஐந்து இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைத்தது போன்ற நடவடிக்கைகளையும் மோடி மேற்கொண்டார்.
'பட்டியலின தலைவர்களை உருவாக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., அறிவுறுத்தியிருப்பதால், அதை நோக்கியே பா.ஜ.,வின் செயல்பாடுகள் இருக்கும்' என்று அக்கட்சியினர் கூறினர்.
வாசகர் கருத்து (35)
36 சதவீதம் இந்துக்கள் கர்நாடகாவில் பிஜேபிக்கு தான் ஓட்டு போட்டு உள்ளார்கள்
பிஜேபி க்கு 36 சதவீதம் இந்து மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள் பிஜேபி ன் 36 சதவீதம் வாக்கு வங்கி கர்நாடகாவில் அப்படியே உள்ளது
கேஷுபாய் படேல் என்ற பிற்படுத்தப்பட்ட தலைவரை வீழ்த்த பி ஜெ பி மற்றும் ஆர் எஸ் எஸ் எடுத்த ஆயுதம் இன்னொரு பிற்படுத்தப்பட்ட தலைவரான மோடி. பின்னணியில் இருந்தவர் சங்கர் சிங் வகேலா என்ற முன்னேறிய வகுப்பு தலைவர். இது தான் ஆர் எஸ் எஸ் ,மற்றும் பி ஜெ பியின் சூத்திரம். இதை தான் காலகாலமாக செய்துவருகின்றனர். இதில் இப்போது தான் என்னவோ புதுப்பாசம் வந்த மாதிரி ஒரு செய்தி போய் வேலைவெட்டி இருந்தா பாருங்க. ஆர் எஸ் எஸ் மற்றும் பி ஜெ பி யின் அடித்தளம் மற்றும் பிரிக்கமுடியாத பாசம் யார் பக்கம் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்
இதே பி ஜெ பி யில் பங்காரு லட்சுமணனுக்கு ஏற்பட்ட கதியை ஊர் உலகம் பார்த்து தானே இருந்தது பங்காரு லட்சுமணனை உள்ளே இருந்தே குழிபறித்து தள்ளியது தாழ்த்தப்பட்ட இல்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த உள்கட்சி ஆட்களோ?? இந்த கட்சியும் இந்த கட்சியின் நேரடி மற்றும் மறைமுக கொள்கைகளோ என்ன என்பதை படித்த , அறிவு தெளிவு உள்ள, மூடநம்பிகைகளை புறம் தள்ளும் எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மனிதரும் புரிந்தே வைத்துள்ளனர். சுயநல கொண்ட , திணிப்பு வகை தலைவர்கள் ... இந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களே இந்த கட்சியில் பதவியில் அமரவைக்கப்பட்டுள்ளனர் என்பது பொதுமக்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கு. மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற கல்யாண் சிங்க் , உமாபாரதி மற்றும் கோவிந்தாச்சார்யா நிலை கட்சியில் எப்படி இருந்தது?? எப்படி இருக்கு?? அப்படிப்பட்ட தலைவர்களை இந்த கட்சி எப்படி பார்த்தது?/ எப்படி நடத்தியது?? அதற்க்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆசி எப்படி கிடைத்தது??இவற்றிற்கு ஒரு நியாயமான நேர்மையான பதிலை எந்த சங்கியாவது இங்கு தர இயலுமா??
திராவிட மாடல் அரசு தமிழக முதல்வர் பதவியை ஒரு பட்டியல் இன மக்களுக்கு கொடுக்குமா