"காங்., ஆட்சி கர்நாடகா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்": சொல்கிறார் கார்கே

கர்நாடக முதல்வராக காங்., கட்சியின் சித்தராமையாவும், துணை முதல்வராக, சிவகுமாரும் இன்று மதியம் 12:30 மணிக்கு பதவி ஏற்கின்றனர். விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர்சிங் சுகு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் கார்கே கூறியதாவது:
பதவியேற்பு விழாவில், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். கர்நாடகாவில் புதிய அரசாக, காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
இது கர்நாடகா மாநில வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் நாட்டில் நல்ல சூழ்நிலையை உருவாக்கும். பதவியேற்பு விழாவில் பங்கேற்க நானும் செல்கிறேன். இது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (17)
காங்., ஆட்சி கர்நாடகா "காங்கிரஸ் அரசியல் வியாதிகளின் ஊழல்" வளர்ச்சிக்கு வழிவகுக்கும்": கார்கே என்று மனதில் நினைத்து வெளியே சொன்னபோது அதை சொல்லாமல் மறைத்து விட்டார் அவ்வளவே
அதை முதலில் இவர் கட்சித் தலைவி சொல்லட்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி என்றால் அது கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் வளர்ச்சி மட்டும்தான். பொதுமக்கள் வளர்ச்சி என்பது எல்லாம் கிடையாது. ஆம் மேலும் ஒரு வளர்ச்சி இருக்கிறது காங்கிரஸ் ஆட்சியில். ஆம், அது ஊழல் வளர்ச்சி. இப்பொழுது பதவி ஏற்கும் சித்தராமையா மற்றும் சிவகுமார் அவர்கள் சொந்த சொத்துக்கள் இன்றைக்கு எவ்வளவு. அவர்கள் ஆட்சியில் அமர்ந்து பிறகு ஆட்சி முடியும்போது அவர்களது சொத்துக்கள் எவ்வளவு 'வளர்ச்சி' அடைந்திருக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
காங்., ஆட்சி கர்நாடகா 'காங்கிரஸ்காரர்களுக்கும், மத்திய காங்கிரஸ்காரர்களுக்கும் மட்டுமே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்":...
அப்பாடா பையனுக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டது. இனிமேல் என்ன வேண்டுமானாலும் பேசலாம்