Load Image
Advertisement

அமலாக்கத்துறை கண்காணிப்பில் 9 அமைச்சர்கள்..

சென்னை-'பினாமி'கள் பெயரில் வெளிநாடுகளில், கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படும், ஒன்பது தி.மு.க., அமைச்சர்கள் குறித்து, அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
Latest Tamil News

மின் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், 2011 -15ல், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, 1.62 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் சோதனை

இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை, உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தொடர, அனுமதி அளித்துள்ளது.

ஓய்வுபெற்ற, டி.ஜி.பி., ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவிக்கு, 2006 - 11ல், தி.மு.க., ஆட்சியில், வீட்டுவசதி வாரியம் சார்பில், முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டது.

அப்போது, அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியிடம், நான்கு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. தற்போது, ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார்.

சமீபத்தில் 'லைக்கா' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த சோதனை வாயிலாக, சில தகவல்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் ஒருவர் பெயர் அடிபடுகிறது.
Latest Tamil News
இவர்கள் உட்பட ஒன்பது அமைச்சர்கள், பினாமிகள் பெயரில், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும், அது சட்ட விரோத பணப் பரிமாற்றம் என்ற அடிப்படையிலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் வங்கி கணக்குகள், பினாமிகள், அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பணப் பரிமாற்றம் உள்ளிட்ட தகவல்களையும் திரட்டி வருகின்றனர்.

வலுவான ஆதாரங்கள் அடிப்படையில், விரைவில் சோதனை நடக்கும் என, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வாசகர் கருத்து (14)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இலங்கையில் முதலீடு செய்த அமைச்சரும் இந்த லிஸ்டில் இருக்கிறாரா?

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

    தமிழ் நாடு அமைச்சர் மட்டும் தான் இப்படியா வேறு எந்த மாநிலத்தில் இப்படி மந்திரிகள் இல்லையா என்ன

  • mohan r - chennai,இந்தியா

    ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவிக்கு, 2006 - 11.,செந்தில் பாலாஜி. இவர், 2011 -15ல்...இன்னும் அமலாக்கத் துறை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்ப ஐயா விசாரணை முடியும், தண்டனை கொடுக்கப்படும். தப்பு இல்ல என்றல் ரிலீஸ் பண்ணுங்க. நம்பிக்கை இழந்து வருகிறோம்.

  • sankar - chennai,இந்தியா

    முதலில் இன்கம் டாஸ் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனசாட்சியுடன் நடந்துகொண்டால் பலர் சிக்குவார்கள் அதுமட்டுமல்ல குற்றவாளிகளுக்கு தண்டனையை உடன் நிறைவேற்றவேண்டும் அனால் எல்லாமே கண்துடைப்பாகத்தான் இருக்கிறது கடவுதான் தண்டிக்க வேண்டும்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    மோடி அடி என்பது இதுதான். எப்படியோ இரண்டு முன்னாள் போலீஸ்காரர்கள் தமிழகத்தை கலக்கோ கலக்கு என்று கலக்குகிறார்கள்... உபிஸ் முட்டுக்கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள், முக்குகிறார்கள், முனகுகிறார்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்