Load Image
Advertisement

ரூ.2000 திரும்ப பெறப்படுகிறது: ரிசர்வ் வங்கி சரியான முடிவு

Rs.2000 withdrawn: RBI right decision ரூ.2000 திரும்ப பெறப்படுகிறது: ரிசர்வ் வங்கி சரியான முடிவு
ADVERTISEMENT
புதுடில்லி: ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் செப்.30 வரை 2000 நோட்டுகள் செல்லுபடியாகும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி சரியான முடிவு எடுத்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, நவ.8 ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.


Latest Tamil News நாளடைவில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு குறைத்து வந்தது. பின்னர் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

* கிளீன் நோட் பாலிஸி என்ற அடிப்படையில் ரூ. 2000 நோட்டுகளை திரும்பபெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை வங்கிகள் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

* கையிருப்பில் வைத்துள்ள ரூ. 2000 நோட்டுகளை வரும் 23 ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை வங்கியில் டிபாசிட் செய்யலாம். ஒரு நாளைக்கு ரூ. 20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

* ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் செப். 30-ம் தேதி வரையே செல்லுபடியாகும்.

*சாதாரண பரிவர்த்தனைகளில் ரூ. 2000 நோட்டு பயன்படுத்துவது குறைந்துள்ளதையடுத்து மேற்கண்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

*புழக்கத்தில் உள்ள மற்ற ரூபாய் நோட்டுகள் தேவைக்கு போதுமானதாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (69)

  • Indhuindian - Chennai,இந்தியா

    பஞ்சாயத்து தேர்தல்ல உறுப்பினர் பதவியை ஏலம்விடறாங்களே அதே மாதிரி மத்த தேர்தலும் நடத்தலாம் யார் அதிகமா கேக்கறாங்களோ அவங்கள தேர்நடுத்துட்டு அந்த துடடை அந்த அந்த தொகுதி வாக்காளர்களுக்கு சமமா பங்கிட்டு அவங்க அவங்க வங்கி கணக்குலே செத்துடலாம். அரசாங்கத்துக்கு தேர்தல் செலவு மிச்சம் அப்படி வங்கி கணக்குலே போடறப்பநதுக்கு வருமான வரியும் கிடைக்கும் ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா. இதுதான் சரியான சோசலிசம் இப்ப இருக்கற மாடல்ல எல்லாருக்கும் ஒரே மாதிரி கிடைக்கறதுல்லே பாதி பேருக்கு ஒண்ணுமே வர்றது இல்ல இந்த மாதிரி ஒரு கண்ணுலே வெண்ணெயும் ஒரு கண்ணுல சுண்ணாம்புங்கற நிலைமை மாறிடும்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஐநூறு ரூபாய் நோட்டுக்களையும் கட்டாயம் பண மதிப்பிழப்பு செய்யணும்....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    எல்லாக் கட்சியினரும் தேர்தல் நிதியை எப்படி வெச்சிருப்பாங்களோ ...???

  • g.s,rajan - chennai ,இந்தியா

    முகம்மது பின் துக்ளக் ஆட்சியில் பிரதமரைத் தவிர்த்து மற்ற எல்லாரும் உதவிப் பிரதம மந்திரிகள்,இனி இந்தியாவில் அதுவும் நடக்கும் என்றே தோன்றுகிறது ....

  • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

    Red giant movies ல இனி வாரத்துக்கு இரண்டு படம் எதிர்பார்க்கலாம் னு நினைக்குறேன்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement