Load Image
Advertisement

தமிழகத்தில் ஜூலை 2 முதல் பொறியியல் கவுன்சிலிங்

Engineering Counseling from 2nd July   தமிழகத்தில் ஜூலை 2 முதல் பொறியியல் கவுன்சிலிங்
ADVERTISEMENT
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 2 ல் துவங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். முன்பு, ஆக.,2ல் இந்த கவுன்சிலிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி கூறியதாவது: பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆக., 2 ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஜூலை 2ம் தேதி கவுன்சிலிங் துவங்கும். முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கும்.
பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 7ல் துவங்கும். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிவிட்டதால், கவுன்சிலிங் முன்பாகவே துவங்குகிறது. மாணவர்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லூரிகள் திறந்திருக்கும். பொறியியல் வகுப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.,3 ல் துவங்கும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம். அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் 3 நாட்கள் நீடிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்புகளில் 1, 07,395 இடங்கள் உள்ளன. www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பொன்முடி கூறினார்.


வாசகர் கருத்து (1)

  • Rama - Tirunelveli,இந்தியா

    2 / 2 டி.என்.ஈ.ஏ கவுண்சலிங் பதிவுக்கு கடைசி தேதி ஜூன் 4 ஆகும், ஆனால் கவுன்சலிங் ஜூன் 2 ஆக தொடங்கும் என்றால் அது எப்படி முடியும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்