Load Image
Advertisement

10ம் வகுப்பில் 91.39% பேர் தேர்ச்சி: பெரம்பலூர் மாவட்டம் டாப்

91.39% pass in class 10: Perambalur district top   10ம் வகுப்பில் 91.39% பேர் தேர்ச்சி: பெரம்பலூர் மாவட்டம் டாப்
ADVERTISEMENT
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக தேர்ச்சியை பெற்ற மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடம் பிடித்தது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச்சில் நடத்தப்பட்டன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம், 8ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியானது.

இதில், தேர்வெழுதியவர்களில் மொத்தம் 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு 90.07 சதவீதமாக இருந்தது. வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, மாணவிகள் 94.66 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். இது மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் அதிகமாகும்.


Tamil News
இந்த கல்வியாண்டில், 3,718 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்கள், அரசு தேர்வுத்துறையின், http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் விபரம் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கும், எஸ்எம்எஸ் வாயிலாக மதிப்பெண் விபரம் அனுப்பி வைக்கப்படுகிறது.
Latest Tamil News

பாட வாரியாக 100% மதிப்பெண் பெற்றவர்கள்





பாடம் - மாணவர்கள் எண்ணிக்கை




தமிழ் - 0
ஆங்கிலம் - 89
கணிதம் - 3,649
அறிவியல் - 3,584
சமூக அறிவியல் - 320




பெரம்பலூர் முதலிடம்





மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. சிவகங்கை (97.53 சதவீதம்) இரண்டாம் இடமும், விருதுநகர் (96.22 சதவீதம்) மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. அந்த வகையில், 83.54 சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

சிவகங்கை மாவட்டம்



மொத்த மாணவர்கள்:17,732

தேர்ச்சி:17,294

தேர்ச்சி சதவீதம்: 97.53.

மாநில அளவில் 2 ம் இடம் பிடித்துள்ளது. அரசு. பள்ளிகள் அளவில் 96.38 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.



வாசகர் கருத்து (2)

  • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

    முதல் மார்க் வாங்கிய மாணவி டீவியில் வழ வழன்னு பேசக்கூடாது, காதுகளை காயப்படுத்தக்கூடாது. பொது மக்களின் தாழ்மையான வேண்டுகோள். மீறினால் வாங்கிய மார்கில் இருந்து 50 மார்க் குறைக்கப்படும்

  • vadivelu - thenkaasi,இந்தியா

    9 லட்சம் மன்னவர்களில் 90000 மாணவர்கள் தேர்ச்சி பெற வில்லை., இது சரியா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement