Load Image
Advertisement

ஐ போன்கள் வாங்குவதில் அமைச்சர்கள் தீவிரம்!

Ministers serious about buying iPhones!   ஐ போன்கள் வாங்குவதில் அமைச்சர்கள் தீவிரம்!
ADVERTISEMENT
''ஐ போன் இருந்தா மட்டும் பேசுங்கோன்னு சொல்றா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''அமைச்சர் தியாகராஜன் பேசியதா, சமீபத்துல ஒரு 'ஆடியோ' வந்துதோல்லியோ... இதன் தொடர்ச்சியா, முதல்வரின் உறவினர்களுக்கு நெருக்கமானவா வீடு, ஆபீஸ்கள்ல வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினாளே ஓய்...

''இதனால, இப்ப மேலிடத்துக்கு நெருக்கமானவா உஷார் ஆகிட்டா... அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தங்களிடம் பேசணும்னா, 'ஐ போன்ல இருக்கற, 'பேஸ் டைம் ஆப்' வழியே மட்டும் பேசுங்கோ'ன்னு சொல்றா... இதனால, ஐ போன் இல்லாத அமைச்சர்களும், அதிகாரிகளும், புதுசா அந்த போன்களை வாங்கிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
Latest Tamil News
''அந்த போன்ல பேசினா, யாரும் பதிவு பண்ண முடியாதா வே...'' என சந்தேகம் கேட்டார், அண்ணாச்சி.

''ஆமாம்... 'பேஸ் டைம் மொபைல் ஆப்'பை, ஐ போன்ல மட்டும் தான் யூஸ் பண்ண முடியுமாம்... அதுல பேசினா, யாரும் பதிவு பண்ணவோ, ஒட்டு கேட்கவோ முடியாதுன்னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


வாசகர் கருத்து (3)

  • Mahendran TC - BAMAKO,மாலி

    பய புள்ளைக எப்படியெல்லாம் யோசிக்குதுங்க ....

  • Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா

    ஆக... வில்லங்கமாக பேசுவோம். ஊழல் பேரம் பேசுவோம். யாரும் பதிவு பண்ணாமல் உஷாராக இருக்கத்தான் முயல்கிறார்கள் தவிர..தங்களை உத்தமனாகக் காட்டிக் கொள்ள யாருமில்லை.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு ....நம் நாட்டு அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் மிகவும் வல்லவர்கள் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement