கூட்டுறவு கடைகளுக்கு கார்ப்பரேட்டிடம் கொள்முதல்
சென்னை:கூட்டுறவு பல்பொருள் அங்காடிக்கு தேவைப்படும் மளிகை உள்ளிட்ட பொருட்களை'ரிலையன்ஸ்' நிறுவனத்திடம் இருந்து வாங்ககூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
கூட்டுறவு துறை181 பல்பொருள் அங்காடிகளை நடத்துகின்றன.
தற்போது சென்னை, மதுரை, சேலம், ஈரோட்டில் செயல்படும் மத்திய கூட்டு கொள்முதல் குழு வாயிலாக துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், மிளகு, ஏலக்காய் ஆகியவையும் 70 வகை மளிகை பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து அங்காடிகளுக்கும் 'சப்ளை'செய்யப்படுகின்றன.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திடம்இருந்து வாங்ககூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:
சிறு வியாபாரிகளிடம் இருந்து தரமான பொருட்களை வாங்கி விற்றாலும் தரம் குறைவாக இருப்பதாகவும் விலை அதிகமாக இருப்பதாகவும் புகார்கூறுகின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுதும் பல்பொருள் அங்காடிகளை நடத்துகிறது. மொத்த விலை அங்காடிகளுக்கு மிக குறைந்த விலையில் பொருட்களை சப்ளை செய்கிறது. அதற்கான பணத்தை தவணை முறையில் வசூலிக்கிறது.
எனவே தனியாருக்கு இணையாக கூட்டுறவு அங்காடிகளிலும் அனைத்து பொருட்களும் விற்கப்படும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மொத்த கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.

அவற்றில் மளிகை எப்.எம்.சி.ஜி. எனப்படும் விரைவில் விற்பனை யாக கூடிய நுகர்வோர் பொருட்கள் சமையல் எண்ணெய் உட்பட பல பொருட்கள் விற்கப்படுகின்றன.
தற்போது சென்னை, மதுரை, சேலம், ஈரோட்டில் செயல்படும் மத்திய கூட்டு கொள்முதல் குழு வாயிலாக துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், மிளகு, ஏலக்காய் ஆகியவையும் 70 வகை மளிகை பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து அங்காடிகளுக்கும் 'சப்ளை'செய்யப்படுகின்றன.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திடம்இருந்து வாங்ககூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:
சிறு வியாபாரிகளிடம் இருந்து தரமான பொருட்களை வாங்கி விற்றாலும் தரம் குறைவாக இருப்பதாகவும் விலை அதிகமாக இருப்பதாகவும் புகார்கூறுகின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுதும் பல்பொருள் அங்காடிகளை நடத்துகிறது. மொத்த விலை அங்காடிகளுக்கு மிக குறைந்த விலையில் பொருட்களை சப்ளை செய்கிறது. அதற்கான பணத்தை தவணை முறையில் வசூலிக்கிறது.
எனவே தனியாருக்கு இணையாக கூட்டுறவு அங்காடிகளிலும் அனைத்து பொருட்களும் விற்கப்படும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மொத்த கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!