Load Image
Advertisement

மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி ஆவேசம்

விக்கிரவாண்டி:'தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும்' என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி நேற்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எக்கியர்குப்பத்தில் மது விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது காவல் துறையினரின் அனுமதியோடு அரசியல் தொடர்பில் இருப்பவர்கள் சாராய விற்பனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்ட சாராய இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.

தி.மு.க. தேர்தல் பிரசாரத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து போடுவேன் என்றவர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை எதுவும் பேசாமல் உள்ளார்.

மக்களின் உயிரை பாதுகாக்கத் தவறிவிட்ட அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க தகுதி இல்லை.

முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கு அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட அமைச்சர் ஆகிய 3 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சியில் சாராயம் குடித்து தமிழக பெண்கள் விதவையாகி உள்ளனர் என 'டுவிட்' போட்ட கனிமொழி எம்.பி. இப்போது ஏன் 'டுவிட்' போடவில்லை. தமிழகத்தில் மது விலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையேல் இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement