நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள, 224 சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் 135, பா.ஜ., 66, ம.ஜ.த., 19, மற்றவர்கள் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற்ற காங்.,கில் முதல்வர் பதவியை பிடிப்பதில், சிவக்குமார், சித்தராமையா இடையே குடுமிப்பிடி சண்டை நடைபெற்று வந்ததால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் கூறுகையில், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர். பார்லிமென்ட் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் நீடிப்பார். வரும் 20 ம் தேதி ( சனிக்கிழமை) பிற்பகல் 12:30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூருவில் நடக்கும். தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொண்டாட்டம்
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின் பங்கேற்பு?
சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பா.ஜ., அல்லாத கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு நிதிஷ்குமார், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பெங்களூரு வருகின்றனர். பதவியேற்பு விழாவில் ஸ்டாலினும் கலந்து கொள்வார் எனக்கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (29)
புதிய ஆட்சி எப்படி இருக்கும் என்று பலர் என்னிடம் கேட்டார்கள். நான் அவர்களுக்கு இப்படி கூறினேன் - old wine in a new bottle - என்று. பாட்டிலின் பெயர்தான் வேறு - காங்கிரஸ். மேலும் wine quality and quantity சற்று அதிகமாக இருக்கும். அதாவது ஊழல் எல்லை மீறும்.
பியூஸ் ஆகும் பல்பு பிரகாசமா எரிந்து பியூஸ் ஆகும் . வைரல் ஆகும் குடி நிகழ்ச்சிகளைக் காணும்போது நம் கர்நாடக உடன்பிறப்புகள் வாழ்க்கை மிகவும் மோசமாகப் போகும் போல் தெரிகிறது . சீக்கிரம் காங்கிரஸ் என்கின்ற பல்பு பியூஸ் ஆகவேண்டும்
வரும் 20 ம் தேதி சனிக்கிழமை நடக்கும் பதவியேற்பு விழாவில், மதியம் 12.30. மணியளவில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர் நல்ல நேராமய்யா இது நல்ல பிரதமையில் பதவி ஏற்பு எவ்வளவு காலம் இது செல்லும் என்பது சொல்லவே முடியாது. ஏன் சண்டைபோட்டுக்கொண்டு இவ்வளவு நாட்கள் பொறுத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல நாள் கிடைக்கவில்லையா மக்கள் கர்நாடகமல்லவா அவதிப்படும்
எனக்கு இரண்டு வாட்ஸப் மெச்செஜ் வந்தது 1) சித்தம் கலங்கிய ராமையா முஸ்லிம்களுடன் ஒரு மசூதியில் தொப்பி போட்டு பிரார்த்தனை 2) காங்கிரஸ் ஜெயிச்சிருச்சின்னு மது பாட்டில் குலுக்கி திறந்து இவரை நோக்கி காண்பித்தல் பிறகு அவரிடம் கொடுத்து அவரை குடிக்க வைத்தல் பிறகு அவர் குடித்த குஷியில் குத்தாட்டம் போடுதல். ஒரு முதல்வர் என்றால் இப்படித்தான் பண்பற்று அறிவிலியாக இருக்கவேண்டும்
தமிழ்நாட்டு மக்கள் போல் கர்நாடக மக்கள் இல்லை... இப்போதே கரண்ட் பில் கட்ட மாட்டேன் என்கிறார்கள்.... இலவச பேருந்துக்கு இப்போ waiting... அடுத்த கோமாளி அரசுக்கு "ஸ்டார்ட் மியூசிக்" தான்... 20ஆம் தேதி.... காங்கிரஸ் வெற்றிப்பெற்றதற்கு ஜார்ஜ் சோரோஸ் வேலையா கூட இருக்கலாம் ... பொறுத்திருந்து பார்ப்போம்...இப்பவே பாக்கிஸ்தான் வாழ்க முழக்கம்.... அடுத்து "கர்நாடக ஸ்டோரி" க்கு ரெடி ஆவோம்... படத்தை மட்டும் பார்ப்போம்... ஆனால் நாடு முன்னேற்றத்திற்கு தடையாய் இருக்கும் கட்சிக்கு ஒட்டுபோட்ட மக்களை என்ன சொல்வது... காங்கிரஸ் அஜென்டா இந்தியாவிலிருந்து ஹிந்து மதத்தை அழிப்பதுதான்.... நாடு எக்கேடு கேட்டு போனால் என்ன?