Load Image
Advertisement

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் ஒருமித்த தீர்ப்பு

SC upholds validity of amendment laws allowing 'Jallikattu' ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் ஒருமித்த தீர்ப்பு
ADVERTISEMENT
புதுடில்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் சட்டத்தில் தவறு இல்லை எனக்கூறியுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள், 2017ல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு. 2017ல் திருத்தம் செய்தது. அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‛பீட்டா' எனப்படும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. வழக்கை விசாரித்த, நீதிபதி கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனுராதா போஸ், ரிஷிகேஸ் ராய், ரவிக்குமார், ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், தீர்பபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மே 18) நீதிபதிகள் ஒருமனதாக வழங்கிய தீர்ப்பு : ‛ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும். அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல்சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீறுவில்லை. ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் கலாசாரத்தில் கலந்துள்ளது. ஜல்லிக்கட்டு கலாசார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும். ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்து விட்ட பிறகு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.வரும் ஆண்டுகளில், விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்' என நீதிபதிகள் கூறினர்.

மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.


வாசகர் கருத்து (25)

  • vbs manian - hyderabad,இந்தியா

    intha varudam kooda jallikattil நான்கைந்து இளைஞர்கள் உயிரிழப்பு. கடந்த பாத்து வருடத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வயிறு கிழிந்து தொடை மார்பு எலும்பு முறிந்து முகத்தில் காயம் பட்டு கண்பார்வை இழந்து தங்கள் வாழ்வையே இழந்து நிற்கிறார்கள்.இதெல்லாம் ஒன்றுமே இல்லையா. தமிழ் கலாச்சாரமா. அங்கு இங்கு ஏதோ உயிர் இழப்பு என்று ஒன்லைன் ரம்மிக்கு தடை.வருடம் தோறும் நிகழும் இந்த கொடுமைக்கு ஒன்றும் முடிவு கிடையாதா.

  • ram -

    super.. நல்ல தீர்ப்பு..

  • அருணாசலம், சென்னை - ,

    இதை சொல்ல ஏனய்யா 5 மாத கால அவகாசம்?

  • Kanagaraj M - Pune,இந்தியா

    இந்தியாவின் ஏற்றுமதி தடுக்கப்பட்டுள்ளது...

  • Kanagaraj M - Pune,இந்தியா

    மாடுகளை காப்பாற்றுவதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement