Load Image
Advertisement

நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்டுடன் மோதல் காரணமா?: சட்டத்துறை அமைச்சர், இணை அமைச்சர் மாற்றம்

புதுடில்லி: நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கும் சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், சட்டத்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகல் சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Latest Tamil News

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு அடிப்படை காரணம், நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்னைகளே ஆகும். கொலிஜீயம் அமைப்பு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் பரிந்துரை செய்வது வழக்கம். நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் பங்கு குறைவு உள்ளது என கிரண் ரிஜிஜூ கூறியிருந்தார். இவருக்கு கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் எதிர் கருத்துகளை தெரிவித்து வந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை மத்திய அரசே நியமிக்க வேண்டும் என்றும் கருத்துகளை கிரண் கூறி வந்தார்,.

Latest Tamil News
இந்நிலையில் கிரண் ரிஜிஜூயிடம் சட்டத்துறை பறிக்கப்பட்டுள்ளது. புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன்ராம் மேவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ஜூன் ராம் மேக்வால் கலாச்சாரத்துறை பதவி வகித்து வந்தார். கிரண் ரிஜிஜூக்கு புவி அறிவியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சரும் மாற்றம்




Latest Tamil News
சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்பி சிங் பாகேல், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.



வாசகர் கருத்து (21)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    கிரண் ரஜ்ஜு பொருத்தமானவர் அவரை மாற்றியது தவறு.கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வேண்டும் பழையபடி

  • Dharmavaan - Chennai,இந்தியா

    kiran

  • Ellamman - Chennai,இந்தியா

    கிரண் ரிஜிஜூ லட்சமன ரேகையை தாண்டிவிட்டார் எனபது நிதர்சனம். கருத்து கூறும் சாமானியர் நிலையில் அவர் இல்லை. ஒன்றிய மந்திரி. அப்போது அவர் கருத்துக்கள் அரசு கருத்தாக தான் எடுத்துக்கொள்ளவேண்டி வரும். அந்த நிலையில் அவருடைய கருத்துக்கள் நீதிபதிகளின் மாண்பை சீர்குலைக்கும் ம்வகையில் அமைந்து இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அரசு நீதிபதிகளின் மாண்பை சீர்குலைக்க முயலுகிறதா என்ற கேவலி வரும். அதிலும் சதாசிவம், கககோய் விஷயங்களில் இந்த அரசும் கட்சியும் நடந்துகொண்ட விதத்தை பார்த்தல் மற்றும் அரசின் விருப்பத்திற்கு மாறாக அல்லது நடுநிலையாக துணிவுடன் தீர்ப்பு அளித்த நீதிபதிகளை மாநிலம் விட்டு மாநிலம் தூக்கி அடித்த விஷயத்தையும் மற்றும் அவர்களின் பதவி உயர்வு கோப்பை சிட்டுக்கு அடியில் போட்டு வைத்து அவர்களின் பதவிக்காலத்தை குறைத்தும் அவர்கள் மேலும் பதவி உயர்வு அடையாவண்ணம் நடந்துகொள்வதையும் இந்த சமயத்தில் சீர்தூக்கி பார்க்கவேண்டும். அரசு சர்வாதிகார முறையில் நடந்துகொள்வதை எந்த ஜனநாயக நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

  • vijay - coimbatore,இந்தியா

    //...உனக்கு தான் பாக்கிஸ்தான் கொடுத்தோமல்லவா அங்கே ஓடிப்போட......// ப்ரோ, இவங்களுக்கு தெரியும் இங்க இந்தியாவில் நிம்மதியா இருக்கலாம் என்ன வேணா பேசலாம். அங்கே பாகிஸ்தானுல சோத்துக்கே வழியில்லை, ராணுவம் வேறு மக்களை கொல்லுது.

  • அப்புசாமி -

    கிரன் அவர்கள் சட்டத்திலும், புவி இயல் துறையிலும் படிச்சு டாக்டர் பட்டம் பெற்றவர் போலிருக்கு.அதான் புவி அறிவியல் துறைக்கு மாத்திட்டாங்க. நாளைக்கி மீன்வளத்துறை க்கு மாத்தினாலும் அதிலும்.பி.எச்.டி வெச்சிருப்பாரு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement