இது குறித்து, தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் உள்ள சிலர் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, 'தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில், மதுவிலக்கு அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, கருணாநிதி தன் கைப்பட அறிக்கை எழுதி வெளியிட்டார். அந்த தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தது.
கையெழுத்து இயக்கம்
இந்த சூழலில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்து சுருண்டு விழுந்து பலியானவர்களை நினைத்து, ஸ்டாலின் கண் கலங்கியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கூட்டணி கட்சி தலைவர்களான அழகிரியும், வைகோவும், போலீஸ் துறை மீது குற்றம் சாட்டிஉள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பழனிசாமியுடன் இணைந்து போராட தயார்' எனக் கூறியுள்ளார். 'தமிழகம் முழுதும் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவோம்' என, த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில், கருணாநிதியுடன் நெருங்கி பழகி, ஆலோசனை வழங்கிய முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், முதல்வர் ஸ்டாலினுக்கு சில யோசனைகளை கூறியுள்ளனர்.
'கருணாநிதியின் நுாறாவது பிறந்த நாளில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும். பெண்களுடைய ஏகோபித்த ஆதரவு கிடைக்கும். அரசியல் வரலாற்றிலும் ஸ்டாலின் பெயர் உச்சம் தொடும். தி.மு.க., ஆட்சி நீடிக்கும்' என கூறியுள்ளனர்.
'மது வருவாய் இழப்பை ஈடுகட்ட, பெண்களுக்கான, 1,000 ரூபாய் உரிமை தொகையை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டு, முதல்வர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
'மணல் உள்ளிட்ட கனிம வளங்களை விற்க, தனியாருக்கு அனுமதி தராமல், அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியாருக்கு போகிற ஒட்டுமொத்த வருவாயும், அரசு கஜானாவில் சேரும்' என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.
விவாதம்
இந்த ஆலோசனைகள் குறித்து, கட்சியின் முன்னணி தலைவர்களிடம், முதல்வர் பேச உள்ளார். குறிப்பாக, சாராய ஆலைகளை நடத்தும், தி.மு.க., புள்ளிகளிடம் பேச உள்ளார்.
தனக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்கள், அனைத்து கட்சிகளின் தலைவர்களிடமும் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளார்.
கருணாநிதி பிறந்த நாளில், மதுவிலக்கு அறிவிப்பு வெளியிடுவதா அல்லது மூடப்பட உள்ள 'டாஸ்மாக்' கடைகளின் எண்ணிக்கையை 500ல் இருந்து ஆயிரமாக அதிகரிப்பதா என்ற விவாதம் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (62)
"கருணாநிதி 100வது பிறந்த நாளில் பூரண மதுவிலக்கு அறிவிப்பு..." - அவரின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது
மக்கள் தினமும் செத்து மடிகிறார்கள் எதிர் கட்சிகள் அவர்கள் தொண்டர்கள் குடிப்பதை நிறுத்த மது விளக்கு தேவை என்று கேட்கிறார் கல் கொண்டு வாருங்கள் வேண்டாம் இந்த தவறான வருமானம் அரசுக்கு
யாருக்கும் 1000 ரூபாய் வேண்டாம் பூரண மது விளக்கு தேவை நாடு உம்மை வாழ்த்தும் வேண்டாம் d
அன்றைக்கு மட்டும் கடையை மூடி விட்டால், காந்தி ஜெயந்திக்கு திறந்து விடுவார்கள்
த்தூ இந்த கருணாநிதி வந்து சாராயக்கடையை திறந்து வைத்து தமிழ்நாட்டையே குட்டி சுவராக்கி விட்டு போனார். அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தன்.