Load Image
Advertisement

மகன் காதல் திருமணம்: தந்தை உடலை கல்லறையில் அடக்கம் செய்ய எதிர்ப்பு

Son love marriage: permission for cremation after negotiation against fathers cremation    மகன் காதல் திருமணம்: தந்தை உடலை  கல்லறையில் அடக்கம் செய்ய எதிர்ப்பு
ADVERTISEMENT
தேனி : தேனி மாவட்டம் கோட்டூரில் மகன் காதல் திருமணம் செய்ததால் தந்தையின் உடலை கல்லறையில் அடக்கம் செய்ய திருச்சபையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் அனுமதியளிக்கப்பட்டது.

கோட்டூர் ஆர்.சி.,காலனியை சேர்ந்த கொத்தனார் ஜான்பீட்டர் 57. இவருக்கு அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமோஸ் ஆகிய மகன்கள் உள்ளனர். மூத்த மகன் போலீஸ்காரராகவும், அமல்ராயன் பேராசிரியராகவும் உள்ளனர். ஆரோன் மண் அள்ளும் வாகன டிரைவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதியினருக்கு குழந்தைகள் உள்ளனர்.

உடல்நலம் சரியின்றி நேற்று முன்தினம் மாலை ஜான்பீட்டர் இறந்தார். இவ்வூரில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளில் திருச்சபை நிர்வாகிகளை அழைத்து மணி ஓசை எழுப்பி குறிப்பிட்ட சமூகத்தினர் ஒன்று கூடி பங்கேற்பர். அதன்படி ஜான் பீட்டர் இறுதிசடங்கு நடத்தி வைக்க திருச்சபை நிர்வாகிகளை அவரது மகன்கள் அழைத்தனர். ஆனால் திருச்சபை நிர்வாகிகள் மணி ஒலிக்க மறுத்ததுடன் ஜான்பீட்டரின் மகன் ஆரோன் திருச்சபை நடைமுறைகளை மீறி மாற்று மத பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.

இதனால் அவர்கள் இருவரும் சர்ச் நிர்வாகிகள், பொது மக்கள் முன் 'மன்னிப்பு' கேட்க வேண்டும்,' என்றனர்.


அதற்கு ஆரோன் மறுத்து சட்டப்படி செல்வேன் என்றதால் பதட்டம் ஏற்பட்டது. இதனால் ஊர்மக்கள் இந்த துக்கத்தில் பங்கேற்கவில்லை.

ஏ.டி.எஸ்.பி., சுகுமாறன், டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், வெங்கடாஜலபதி திருச்சபை பொறுப்பாளர்கள் சுவிக்கான்ராஜா, ராஜா, கோட்டூர் ஊராட்சித் தலைவர் முத்துவேல், ஒன்றிய கவுன்சிலர் மாலா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து ஜான்பீட்டர் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி கல்லறை பகுதி, இறந்தவர் வீடு உள்ளிட்ட ஊரில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து (12)

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    ஹிந்து மூக்குல குத்து, கோவில் சாத்தானின் கூடாரம், என்றெல்லாம் கூவுறவனுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? இதே ரீதியில் ஹிந்துக்களும் இவர்களை பற்றி பேசினால்? உடனே திராவிடியா அரசும் க்ரிப்டோ போலீஸ்காரனும் சட்டத்தை தூக்கிக்கொண்டு வந்து விடுங்கள்.. சென்னையில் கோரனாவால் இறந்த ஒரு கிருத்துவ மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கல்லறையில் இடம் கொடுக்காததால் அதனை ஹிந்துக்களின் சுடுகாட்டில் ஹிந்துக்களின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்ய வைத்தது தமிழக அரசு.. பிறகு அது வேறுமாதிரி ஆகிப்போனது.. இதுபோன்ற விஷயங்களை ஏன் அடக்கி வாசிக்க வேண்டும்?

  • theruvasagan -

    இந்து மதத்தில் ஜாதி பாகுபாடு பற்றி பேசும் யோக்கிய சிகாமணிகளா. வாயில கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க. இப்ப வாயத் திறந்து பேசுங்க.

  • Vijay - Chennai,இந்தியா

    மாமாவளவா எங்க ...

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மத மாறி கும்பல் மதம் மாறி திருமணம் செஞ்சத பத்தி பேசுது.. தாய் மதம் திரும்புங்கள் சகோதரர்களே

  • sankar - Nellai,இந்தியா

    மத நல்லிணக்கம் - சகிப்புத்தன்மை - பற்றி - வாய் கிழிப்போர் உடனே வரவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement