Load Image
Advertisement

அமலாக்க துறை விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் உதயநிதி

Minister Udhayanidhi in the ring of investigation by the Enforcement Directorate   அமலாக்க துறை விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் உதயநிதி
ADVERTISEMENT
சென்னை: 'லைக்கா' பட தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் நடத்திய சோதனைக்கு பின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை, விசாரணை வளையத்திற்குள் அமலாக்கத் துறை கொண்டு வந்துள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சினிமா படங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, 'லைக்கா' நிறுவன அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் உதயநிதியின், 'ரெட் ஜெயன்ட்' பட தயாரிப்பு நிறுவனத்துடன், கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில், சென்னை வேளச்சேரியில் உள்ள, உதய நிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்துஉள்ளது.

அதேபோல, எழும்பூர் எத்திராஜ் சாலையில், வழக்கறிஞர் பாபு என்பவர், உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை அலுவலகம் நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்திலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாபு, அலுவலகத்தில் இல்லை என்பதால், நேரில் ஆஜராக உத்தர விட்டனர். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், பாபு நேற்று ஆஜரானார்.
Latest Tamil News
இதற்கிடையில், 'லைக்கா' நிறுவனம், உதயநிதி நண்பர் வீடு, ரசிகர் மன்ற நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள்நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில், உதயநிதி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார்.

இது குறித்து, உதய நிதி ரசிகர் மன்ற நிர்வாகி பாபு கூறுகையில், ''சோதனையில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், என்னிடம் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்துள்ளேன். இன்றும் விசாரணைக்கு வர வலியுறுத்தினர்; ஆஜராகி விளக்கம் அளிப்பேன்,'' என்றார்.


வாசகர் கருத்து (37)

  • s sambath kumar - chennai,இந்தியா

    அப்வாய் மூடி மௌனியாக இருந்திருக்கும்.இந்த ரெண்டும் சூப்பர்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி . மென்னியை பிடி இல்லை யென்றாகில் காலை பிடி தான். எப்படியும் சமாளிப்போம். திருட தெரிந்தவனுக்கு தேத்த தெரியாதா பணம் ( வக்கீல்கள் உள்ள வரை) பாதாளம் வரைக்கும் பாயும்

  • RAJA68 -

    ,பயப்படாதீங்க தம்பி. பள்ளிக்கூடத்துல வாத்தியார் கேள்வி கேட்டா பதில் சொல்ற மாதிரி சொல்லணும் ஏடாகூடமா மாத்தி சொன்னீங்க அவ்வளவுதான்.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    அதாவது ஒரே லட்டு மூலமாக 2024 மக்களவைத் தேர்தலுக்கான செலவை பிஜேபி சமாளித்துவிடும் ...

  • Rajasekaran - Chennai,இந்தியா

    இந்த மாதிரி விசாரணை வளையத்திற்குள் வந்தால், திரும்பி கௌரவமாக வெளியில் நடமாட முடியாது என்ற அச்சத்தை பொது மக்களிடையே பரவச்செய்ய , சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் என்ன செய்யப்போகிறார்கள் ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்