Load Image
Advertisement

சாராயம் விற்ற நபருக்கே நிவாரணம்: முதல்வருக்கு சரியான தகவல் இல்லையா?

Does the chief not have the right information?   சாராயம் விற்ற நபருக்கே நிவாரணம்: முதல்வருக்கு சரியான தகவல் இல்லையா?
ADVERTISEMENT
சமீபத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி கோப்பை வென்றதாகக் கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், உதயநிதி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று, புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், அவர் பொய் சொல்லி ஏமாற்றியது தெரிய வந்ததும், அரசையும் அதிகாரிகளையும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்.

இப்போது, அதேபோல், சாராயம் விற்ற நபர் என்பதை அறியாமல், அந்த நபர் மருத்துவமனையில் இருந்ததால், அவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. குற்றவாளிக்கே நிவாரண உதவி அறிவிக்கப்பட்ட செயல், மக்களிடையே கேலிக்கூத்தாக மாறி உள்ளது.

'இதற்கெல்லாம் அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம். முதல்வருக்கு அதிகாரிகள் சரியான தகவலை அளிப்பதில்லை. தவறான ஆலோசனைகளை வழங்குகின்றனர். 'தவறான தகவல் அளிப்போர் மீது, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கவனமுடன் செயல்படத் துவங்குவர். 'எனவே, முதல்வர் கண்டிப்புடன் நடந்து கொள்வது அவசியம்' என, தலைமைசெயலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -


வாசகர் கருத்து (41)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    தத்தி என்று தெரிந்து எல்லோராரும் யேமாற்றுகிறார்கள் போல் தெரிகிறது

  • vadivelu - thenkaasi,இந்தியா

    சாராயம் தயாரிக்கவில்லை, விஷ சாராயம் தயாரித்தவர்.கசாராயம் இல்லையாம் , விஷ சாராயமாம்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அதெல்லாம் தகவல் தெரியாமல் இல்லை. இப்பொழுது மக்களும், ஊடகங்களும் இதைப்பற்றித்தானே பேசுகிறார்களே, எழுதுகிறார்கள். அந்த 30000 கோடி விஷயத்தை அனைவரும் மறந்தே போனார்கள்தானே?

  • Mahendran TC - BAMAKO,மாலி

    அப்படித்தான் இந்த கையாலாகாத முதலமைச்சரும் ...

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    கற்றவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டால் நல்லது நடக்கும். கோட்டா கூட்டத்தையும், கட்சி அல்லக்கைகளையும் சுற்றி வைத்துக்கொண்டால் வேறு எண்ண நடக்கும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்