வைகுண்ட பெருமாள் கோவிலில் இன்று கருட சேவை உற்சவம்
காஞ்சிபுரம்:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமான காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம், 16ல் அதிகாலை 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாக னத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
மூன்றாம் நாள் பிரபல உற்சவமான இன்று காலை 6:00 மணிக்கு, கருடசேவை உற்சவம் நடக்கிறது.
இதில், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளும் வைகுண்ட பெருமாள் சன்னிதி தெரு, மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதிகளில் வலம் வருவார். இரவு ஹனுமந்த வாகன உற்சவம் நடக்கிறது.

இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் சுவாமி உலா வந்தார்.
மூன்றாம் நாள் பிரபல உற்சவமான இன்று காலை 6:00 மணிக்கு, கருடசேவை உற்சவம் நடக்கிறது.
இதில், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளும் வைகுண்ட பெருமாள் சன்னிதி தெரு, மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதிகளில் வலம் வருவார். இரவு ஹனுமந்த வாகன உற்சவம் நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!