கள்ளச்சாராய வழக்குகள் கொலை வழக்குகளாக மாற்றம் : தமிழக டி.ஜி.பி., உத்தரவு

இச்சூழலில், கள்ளாச்சாராய மரணம் தொடர்பாக, பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை, கொலை வழக்குகளாக பதிவு செய்ய, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள, தனியார் தொழிற்சாலை அதிபர், இளையநம்பி, திவாலான தனது தொழிற்சாலையில் இருந்து மெத்தனாலை, புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் ராஜாவு ஆகியோருக்கு விற்றுள்ளார்.
அவற்றை, சித்தாமூர் மற்றும் மரக்காணத்துக்கு கொண்டு வந்த, விஜி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 1200 லிட்டர் சாராயத்தில், 5 லிட்டரை மரக்காணத்திலும், 3 லிட்டரை சித்தாமூரிலும் விற்றுள்ளனர். 1,192 லிட்டர் சாராயத்தை 48 மணிநேரத்தில், போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

உயிரிழப்பை ஏற்படுத்தியது, தின்னர் போன்றவற்றை தயாரிக்கப்படும் எத்தனால். மெத்தனால் மனிதர்களின் உயிரை பறிக்கும் தன்மையுடைது.
மெத்தனால் தயாரிக்கும், பயன்படுத்தும் ஆலைகளை ஆய்வு செய்ய எஸ்.பி., கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (18)
வேற ஏதாவது பிரிவில் வழக்கு ஜோடிச்சு, ஒரு 30000 பக்கத்துக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, அமலாக்கத்துறை, சி.பி.ஐ வசம் ஒப்படைச்சு கேசையே ஒண்ணுமில்லாம செய்ய வழி இருக்கா?
If those caused these deaths are deemed as Murderers, the relief should be stopped. Why the govt. exchequer, I.e., our tax money should go to the affected families? Let the court take this as urgent and announce relief from the funds of the accused
இந்திய தண்டனைச்சட்டத்தின்படி கொலைக்கு உடந்தையாகஇருந்தாலும் குற்றம்தான். எனவே அமலாக்கத்துறை போலீஸ் அதிகாரிகளின்மீதும் கொலைகுற்றம்தான் சுமத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறிய இடமாறுதல், காத்திருப்போர் பட்டியல், சஸ்பெண்ட் செய்வதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளை விதித்து அவர்களையும் கைதுசெய்து உள்ளே தள்ளவேண்டும். அப்பொழுதுதான் லஞ்ச அதிகாரிகளுக்கு பயம் வரும்
கொலை என வழக்கு பதிவு செய்ய Crpc யில் எந்த பிரிவில் பதிவு செய்ய இயலும்? அதை விளக்க வேண்டும் முதலில். FIR ல் தவறான பிரிவு குற்றவாளிகள் விடுதலை ஆக வழி வகுக்கும்.
மக்களை காப்பாற்றுவது முன்னெச்சரிக்கை மட்டுமே, பின்னெச்சரிக்கை அல்ல ... பணியை ஒழுங்கா செய்யாமல் பெஞ்சை தேய்த்து சம்பளம் பெரும் - இவரை போன்ற அதிகாரிகள் நம் நாட்டின் மக்கள் உயிருக்கும் , வளர்ச்சிக்கும் கேடு விளைவிப்பவர்கள் . மன சாட்சியை கழற்றி வைத்து விட்டு வேலை செய்யும் இவரை போன்றோர், பூமிக்கு பாரமாக வாழ்பவர்கள். தன் குடும்பம், தன் மனைவி, தன் புள்ளைகள் - தன் வேலையை ஒழுங்காக செய்யாததால் இதனை உயிர் போகிறது என்பதை கடைசி வரை அவர்களுக்கு புரியாது ... பேட்டி அறிக்கை - அதோடு வேலை முடிந்தது ...