Load Image
Advertisement

விவாகரத்தில் முடியும் காதல் திருமணங்கள்: உச்சநீதிமன்றம் கவலை

புதுடில்லி: பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் நடக்கின்றன என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Latest Tamil News


காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடர்பான வழக்கு, இன்று(மே 17) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காதல் திருமணத்தில் எழுந்த விவகாரம் என்பது தெரிய வந்தவுடன், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் இருந்துதான் விவாகரத்தும் அதிகரிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தனர்.
Latest Tamil News

இதையடுத்து காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், கணவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, சமீபத்தில் நீதிமன்றம் உடனடி விவாகரத்து வழங்கலாம், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு கணவரின் சம்மதத்தின் பேரில் விவகாரத்து வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (22)

  • அப்புசாமி -

    இதெல்லாம் காலத்தின் கோலம். பெண் விடுதலைன்னு நீட்டி முழக்குவார்கள். விவாகரத்துக்கு முக்கிய காரணம் ஆண்களின் infidelity தான். அந்தக்காலத்தில் இது மாதிரி ஒழுக்கக் குறைவுகளை பெண்கள் சகித்துக்.கொண்டார்கள். இப்போ அப்படி இல்லை.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    குறிப்பாக இளம் விதவைகள் தமிழ்நாட்டில் மிக மிக அதிகம் ....

  • Mohan - Thanjavur ,இந்தியா

    மணிக்குஞ்சு சார், திருநங்கையை மணந்தால் ஷாப்பிங் போய் ரெடிமேடா ரெண்டு, மூனு குழந்தை வாங்கவேண்டியிருக்கும்.. பதிலாக விதவையை மணக்கலாம். எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டிருக்கு.

  • மு.செந்தமிழன் -

    இங்கே நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கலாம். அமேசான் ஆன்லைன் தளத்தில் விலை உயர்ந்த ஒரு பொருள் ஆர்டர் செய்து இருப்போம், அது நம் கைக்கு கிடைக்கும் வரை இருப்புகொள்ளது, ஆனால் சில நாட்கள் கழித்து பார்த்தால் அது ஒரு மூலையில் கிடக்கும். மனித மணமும் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது. நமக்கு என உரிமை ஆனவுடன் அதன் மீது பற்று குறைகிறது

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பெற்றோர்கள் பார்த்துப் பேசி நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியடையாது ,இதில் ஒரு சில விதிவிலக்குகளும் உள்ளது ,ஆனால் கண்டவுடன் காதல் ,கத்திரிக்காய் திருமணம் என்பது சற்று ரிஸ்க்கான விஷயமே ,முதலில் சந்தோஷமாக இருக்கும் காதல் ஜோடிகள் பின்னாளில் சரியான புரிதல் இல்லாததால் கசந்து போய் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்தாலும் அதைச் சமாளிக்க முடியாமல் இறுதியில் விவாகரத்து முடிவை எடுக்கின்றனர். பொருளாதாரமும் ஒரு முக்கியக் காரணமாக தற்போது பூதாகாரமாக உருவெடுத்து உள்ளது .பொருளாதாரம் அதிகமாக இருந்தாலும் பிரச்சனை ,இல்லாவிட்டாலும் பிரச்சனை ,நடுத்தரமாக இருந்தாலும் பிரச்சனைதான்.பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லும் மனப் பக்குவம் இந்தியாவில் வெகுவாகக் குறைந்து வருகிறது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்