Load Image
Advertisement

கள்ளச்சாராய மரணத்திற்கு நிவாரணம்: அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

Relief for counterfeiting death: Minister Subramanians obsession  கள்ளச்சாராய மரணத்திற்கு நிவாரணம்: அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
ADVERTISEMENT

தஞ்சாவூர்: ‛கள்ளச்சாராய பிரச்னைக்கு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என எல்லோரும் கூறுகிறார்கள். அப்படியென்றால், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., போன்றவர்கள் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து இறந்தது சட்டபூர்வமாக இல்லாததாக இருக்கலாம். அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் நிவாரணம் அளித்துள்ளார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கள்ளச்சாராய மரணத்திற்கு, ஜெயலிலதா, பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வராக இருந்த போது நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில், தரும் தொகையை கொச்சைப்படுத்துவது என்பது, எதிர்க்கட்சி தலைவர் பொறுப்புக்கு அழகானது அல்ல.


மெத்தனால் வினியோகம், விற்பனை, உற்பத்தி மூன்றையும் கண்காணிக்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட உள்ளது. கள்ளச்சாராய பிரச்னைக்கு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என எல்லோரும் கூறுகிறார்கள். அப்படியென்றால், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., போன்றவர்கள் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும். கும்பகோணத்தில் நீராடலின் போது எத்தனை உயிர்கள் பலியானது. அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? கோடநாட்டில் ஐந்து கொலைகள் நடந்துள்ளது. இதற்கு பழனிசாமி ராஜினாமா செய்து விட்டாரா?. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பேச வேண்டும்.


இது போன்ற விஷயங்களில் எடுத்தோம் கவுத்தோம் என அரசியல் தலைவர்கள் பேசுவது முறையல்ல. இதுபோன்ற சூழலில்,பொதுமக்களும் பொறுப்புள்ள, சமூக ஆர்வலர்களும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது, அப்பகுதியினருக்கு தெரியாமல் இருக்காது. அப்படி தெரியும் பட்சத்தில் பொதுமக்கள் போலீஸாருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்க வேண்டும். இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில், இது போன்ற குற்றச் செயல்களை தடுப்பதில் ஈடுபட வேண்டும்.


பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கஜா புயல் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டது. அப்போது அவர் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றாரா என்பதை உணர வேண்டும். ஆனால் முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்துக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டு பணிகளை செய்திருக்கலாம்.
ஆனால் அப்படி செய்யாமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். அத்துடன் நிவாரணத்தை உடனடியாக அறிவித்து, வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிட்டார். இப்படி துரிதமாக செயல்பட்டவரை பொம்மை என சொன்னால், தனது ஆட்சி காலத்தில் துாங்கிக் கொண்டிருந்த பழனிசாமியை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (16)

 • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

  ஒரு அமைச்சருக்கான தகுதி உள்ள பேச்சு இவை அல்ல.... பொது மக்கள் கள்ள சாராயம் குறித்து போலீஸ்க்கு தகவல் அளிக்கணுமாம் - போலீஸ் உடந்தையோடுதான் நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும், எப்படி மக்கள் தகவல் அளிப்பர். கள்ள சாராயம் குறித்து கேட்டல் புயல் வந்தது, கோடா நாட்டில் கொலை நடந்தது - அடேய் அதுவும் இதுவும் ஒன்றா .இந்த வித்தியாசம் கூட தெரியவில்லை. ஒட்டு மொத அரசின், காவல் துறையின் தோல்வி - கள்ள சாராயம் பலி அதிமுக ஆட்சியில் இல்ல .... திமுக ஆட்சியில் ஏன் நடக்கிறது அதற்கு பதில் சொல் அமைச்சரே ... என்னமோ பெரிய சாதனை போல லண்டனில் மாறாத்தென் ஓடினாராம் .... இங்கே உள்ள பிரச்சனைக்கு வேலை செய்யுங்கள் ... என்ன ஜென்மங்களோ தெரியவில்லை

 • Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்

  பொது மக்கள் வங்கிகளில் எப்.டி, எஸ்.பி அகவுண்டகளில் சேமித்து வய்த்த பணத்தை நம்ப கடனா வாஙகி, திருப்பி கட்டாம இலவசம், நிவாரணம் என்று வாரி விடறோம். மக்களுக்கும் இது நம்ம பணம் தான் என்றே தெரியவில்லை. அப்புறம் என்ன வாரி விடுங்க சார். பாகிஸ்தான் போலவோ அல்லது இலங்கை போலவோ மக்கள் இதை புரிஞ்சுக்கும் பொது தான் புரட்சி வெடித்து நமக்கு தொந்தரவு வரும். அதுவரை உஜாலா செய்ய வேண்டியதுதானே. சும்மா எடுத்து விடுங்க சார்.

 • THANGARAJ - CHENNAI,இந்தியா

  கள்ள சாராய இறப்புக்கு நிவாரண நிதி கொடுப்பதை மக்கள் கொச்சை படுத்தினால், நீங்கள் திமுக கட்சி நிதியில் இருந்து மேலும் ரூ 5 லட்சம் கொடுத்தால் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டார்கள்?

 • Sekar KR - Chennai,இந்தியா

  இளைஞர் முதல் பெரியார் வரை கஞ்ஜாவுக்கு அடிமையாகி எந்தவித குற்றசெயலுக்கும் தயாராகிவிட்டது வேதனை. கள்ள சாரயத்ததோடு கஞ்சா விற்பவன் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை. கவலைப்படாத காவல்துறை அதிகாரிகளின் மகளும் மகனும் இதற்கு பலியாகக் கூடும்.

 • PV, முத்தூர் -

  எல்லாம் சரி, உங்க கட்சி நிதிலயிருந்து கொடுக்கவேண்டியதுதான?பொதுமக்கள் புகார்ழளிக்கனுமா, காய்ச்சரதே உங்க கட்சிதான, அவர்களை கட்டுப்படுத்த முடியாதா உங்களால? போலீஸ் மற்றும் சாராயத்துரை அமைச்சர்கள் பதவி விலகுவார்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement