Load Image
Advertisement

திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
Latest Tamil News


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாசில்தார் இந்திராவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுக்கும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் தமிழக பாஜ.,தலைவர் அண்ணாமலை வெளியீட்டு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அண்ணாமலை கூறியிருப்பதாவது: அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் தாசில்தாரை, போலீசார் முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது? திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?.

Latest Tamil News
உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்குப்பதிவு


இதனிடையே, தாசில்தார் இந்திரா அளித்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், தனபால் தலைமறைவானார். அவர், தாசில்தாருடன் சமாதானம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
பிரச்னைக்குள்ளான கொடிக்கம்பத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனை வைத்து விசிக.,வினர் கொடியேற்றிய நிலையில், அந்த கம்பத்தை இரவோடு இரவாக வருவாய்த்துறையினர் அகற்றினர்.வாசகர் கருத்து (8)

 • Kumar - Newyork,யூ.எஸ்.ஏ

  இந்த விஷசாராயம் புதுவையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதால், அதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்வார்களா? இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? இந்த உயிரிழப்புகள் மூலம் புதுவை மக்கள் வெட்கி தலைகுனியும் நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஆட்சியாளர்களால் மக்களுக்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. சாராய கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை செயலாளர் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. கலால்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புதுவை தலைமை செயலாளர் அனுப்பிய கோப்பு முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அலுவலகத்தில் தூங்குகிறது. எக்கியார்குப்பம் மக்கள் சாவுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  மிரட்டல் இருந்தா அண்ணாமலை மாதிரியே அனைத்து அரசு அதிகாரிகளும் ராஜினாமா செஞ்சுட்டு ஆடியோ வீடியோ ரிலீஸ் செய்யணும்

 • muthu - tirunelveli,இந்தியா

  What is the written rule to be followed to lie a party post with flag. Why govt official not teaching general public about this rule and to follow with care to prevent clash . Govt official should not practice discrimination among public

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  இதுபோல ஒரு சி எம் ஐ இந்த தேசம் எங்குமே பார்க்காது. அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. அலுவலகம் புகுந்து கொலை செய்கின்றார்கள். இதோ பெண் தாசில்தாரை போலீசார் முன்னிலையில் படு மோசமான கெட்டவார்த்தையால் திட்டுகின்றார். அதுவும் போதாமல் கொலை செய்துவிடுவேன் என்று பொதுவெளியில் மிரட்டுகின்றார். இப்படி ஒரு ஆட்சியை இந்த தமிழகம் கண்டதே இல்லை என்று உறுதியாக சொல்வேன். இயலாமை எனப்தா அல்லது இதுபோன்ற செய்திகள் ஸ்டாலினின் செவிகளுக்கு செல்வதில்லையா அல்லது கூட்டணி கட்சிக்காக கண்டுகொள்வதில்லையா? பயமா? அச்சமா? ஏன் ஸ்டாலினுக்கு என்னாச்சு? எவ்வளவோ அரசியல் சார்ந்த விமர்சனங்களை இவர் மீது வைத்துள்ளேன். அது தவறானதல்ல..ஆனால் இதுபோன்ற செய்திகளில் ஸ்டாலினின் மௌனம் வெட்கக்கேடானது. இவரே அரசு ஊழியர்கள கைவிட்டுவிட்டால்..பின்னர் யார்தான் இவர்களை பாதுகாப்பது? முதல்வருக்கு ஏதோ மனதளவில் ஒருவித பய உணர்ச்சி இருக்கிறதோ என்று சந்தேகம் வருகின்றது. சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்னவர்..இன்றைக்கு பேசாமடந்தையாக இருப்பதை பார்க்கும்போது...வருத்தமே மிஞ்சுகின்றது. இப்படியெல்லாம் ஒரு முதல்வர் இருக்க முடியுமா என்கிற யோசனையில் இழுத்து செல்கின்றது மனது. தூக்கமின்மையால் அவதிப்படுகின்றாரோ என்று வருத்தப்படவே முடிகின்றது. ஒருபோதும் இல்லாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் போலீசை மிரட்டுவதும் அதிகாரிகளை கொலை செய்வது..மீண்டும் மிரட்டுவது போன்றவை நாட்டுக்கு நல்லதல்ல..இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சர்வாதிகாரியாக கூட மாறவேண்டாம்.. ஒரு சாமான்ய மனிதனாக இருந்து பாருங்கள்.. மாநிலம் போதையால் தள்ளாடுகின்றது. ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கின்றது..இது பொய்யான விமர்சனம் இல்லைங்க ஸ்டாலின்..வருத்தத்தை பகிர்கின்றேன். நான் உங்களுக்கு வாக்களிக்காவிட்டாலும் நீங்கள்தான் எனக்கும் முதல்வர். போலீஸ் அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள் என்றே தெரியவில்லை. அவரை பேசாமல் தீயணைப்பு துறைக்கே மாற்றிவிடுங்கள் ஹாய்யாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கட்டும். வேதனையோடு வருகின்ற கருத்துப்பதிவு இது. அந்த பெண் தாசில்தாரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அந்த காணொளியில் பாருங்கள் புரியும் தெரியும்..

 • kumar -

  அரசு ஊழியர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கதிகலங்க வைத்த சட்ட ஒழுங்கு இரும்பு கரங்களால் கட்டுக்கோப்பாக வைத்து ஆட்சி செய்த ஒரே அரசியல் கட்சித் தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தவிர வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்