கர்நாடக முதல்வராகிறார் சித்து?: துணை முதல்வராகிறார் சிவா?

டில்லியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுலை இன்று(மே 17) சித்தராமையா மற்றும் டி.கேசிவகுமார் தனி தனியாக சந்தித்தனர். அப்போது கர்நாடகா முதல்வர் நியமனம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் முதல்வராக, சித்தராமையாவும், டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும், முக்கியமான இலாகாக்களுக்கும் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 3.30 மணிக்கு பெங்களூருவில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

ராகுலை சந்தித்த பின் சித்தராமையா அளித்த பேட்டி: கர்நாடக முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் எனக் கூறியுள்ளார்
72 மணி நேரத்தில்
இதனிடையே, மல்லிகார்ஜூன கார்கே வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், காங்கிரசில் தலைவர் மிகத்தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். எந்த முடிவு எடுத்தாலும், அது உங்களிடம் அறிவிக்கப்படும். அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (22)
நாடாறு மாதம் காடாறு மாதம் கதைதான். யார் முதல் இரண்டரை ஆண்டு காலம் ஆள்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு முக்கிய துறைகள் உள்துறை அமைச்சகம் அதில் ஒன்று, மற்றொன்று பொதுப்பணிதுறை. அடுத்த இரண்டரை காலம் ஆள ஒற்று கொள்பவர்களுக்கு தக்க சன்மானம் மற்றும் முக்கிய துணை முதல்வர் பதவி உண்டு.
"ஸ்டார்ட் தி மியூசிக்" ....
They can Give Dy CM Post for Muslim, Christian,Lingayat,Gowda,Vokaligas
இஸ்லாமியருக்கு துணை முதல்வர் பதவியோடு, கல்வி, நிதித்துறை, காவல்துறை போன்ற ஐந்து முக்கிய அமைச்சர் பதவிகளையும் கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ~ நானும் முதலமைச்சர் பதவிக்கு ரெடியா இருக்கேன் நு சொல்லி ஆர்பாட்டம் பன்றரு