ADVERTISEMENT
பாரிஸ்: புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக்கம்பள வரவேற்பில் வேஷ்டி சட்டை அணிந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் 'கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுதும் உள்ள திரைப்பட ரசிகர்களை கவரும் வகையில் இந்த விழா நடைபெற்றது. இதில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில், நம் நாட்டின் சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நம் பாரம்பரிய உடையான வேட்டியில் பங்கேற்றார்.
இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:
உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.
ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில், சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம் எனக் கூறப்பட்டுள்ளது.
வேட்டி இந்திய உடை .... டுமீலன்ஸ் க்கு மட்டும் உரித்தானது அல்ல ...