அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல்1ம் தேதியிலிருந்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி, 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல்1ம் தேதியிலிருந்து அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களின் நலன் கருதி இந்த நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போது தமிழக அரசும் அதைப்பின்பற்றி உயர்வை அறிவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (15)
முதலில் நமது நாட்டில் பெருகிவரும் விலைவாசியைக் குறையுங்க,பஞ்சப் படிக்கு ஒரே பஞ்சப் பாட்டா இருக்கு ....
அரசுப்பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் வந்தவர்கள் அரசின் தவறால் கொடுக்கப்பட்ட கருணை அடிப்படையில் வந்தவர்கள். அதனாலதான் பழனிசாமி வெற்றிபெறவில்லை.
அரசாங்கத்துல மூன்று மாசம் அகவிலைப் படியைத் தராம ஏமாத்துறாங்க, அப்புறம் தனியார் நிறுவனங்களைப் பற்றி கேப்பானேன் ...
இருக்கும் நிதிச்சுமை போதாதென்று, ஒவ்வொரு அரசும் இவர்களை சீமான்வீட்டு செல்லப்பிள்ளையாக நடத்துகிறது. இதற்கான நிதிச்சுமை வரி மற்றும் விலைவாசி உயர்வாக, திருவாளர் பொதுஜனம் தலையில் சுமை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இப்போது இவனுங்க என்னத்த பெரிசா கிழிக்கிறானுங்கன்னு சம்பள உயர்வு? தினமும் இவனுங்க வாங்கும் லஞ்சமே மாதத்திற்கு பல லட்சம் வரும். இதற்கு மீறி இவர்கள் வாங்குவது தண்ட சம்பளம்.