ADVERTISEMENT
சென்னை: கவர்னர் ரவியை மிரட்டல் விடுக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது மீண்டும் திமுக.,வில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரையின்போது சில வார்த்தைகளை சொல்லாமல் தவிர்த்த சம்பவத்தால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி பாதியில் வெளியேறினார். இந்த சம்பவத்தை வைத்து திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுக்கும் வகையில் தகாத வார்த்தைகளில் கவர்னரை திட்டி பேசியிருந்தார்.

இந்நிலையில் சென்னை வடக்கு மாவட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

அவரது பேச்சில், ‛கவர்னர் ரவி உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதி கொடுத்த படி படித்திருந்தால் அவர் காலில் பூப்போட்டு அனுப்பியிருப்போம். ஆனால், தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் கவர்னரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது' என்பது போன்ற மேலும் பல தகாத வார்த்தைகளால் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் சென்னை வடக்கு மாவட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (67)
இவன் அளவுக்கு அசிங்கமாக, மட்டமாக பேச வேறு ஆளு இல்லையாம். அதான் மீண்டும் சேர்த்து கிட்டாங்களாம்.
இவரை போன்ற பாடையில்,பேசுபவர்கள்தான்.. கழகத்திற்கு தேவை படுகிறது? கட்சி முக்கிய பொறுப்பு வகி ககும், திருவாளர்கள்,,ஆ .ராசா ,வை ,அவரின் பேச்சுக்கெல்லாம், யாராவது கேள்வி கேட்டார்களா
Shameless DMK. This is expected only.
இதுவும் திராவிட மாடல்தான். தெரிஞ்ச விஷயம்தான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இந்த தி மு காவில் என்றைக்கு தான் இவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசியிருக்கிறார்கள்.