உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை, கர்நாடகாவில் நான்காண்டுகளாக பதவியில் இருந்த பா.ஜ., அரசின் சாதனைகள், வேதனைகள் அடிப்படையில், மக்கள் வழங்கிய தீர்ப்பாக பார்க்க முடியுமே தவிர, மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிரான தீர்ப்பு என்று சொல்ல முடியாது; அப்படி சொன்னாலும், அது சரியானதல்ல.
ஏனெனில்...

சமீபத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில், உ.பி.,யில், மாநகராட்சி தேர்தல் முடிவுகளும் வெளியாகின. அதில், மொத்தமுள்ள, 17 மேயர் பதவிகளையும், பா.ஜ.,வே கைப்பற்றியுள்ளது. அத்துடன், இரு சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும், பா.ஜ., கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
எனவே, மாநில தேர்தல் முடிவுகளை வைத்து, மத்தியில் உள்ள ஆட்சி பற்றிய முடிவுக்கு வருவது மடத்தனமானது. கர்நாடகாவில், 2018 சட்டசபை தேர்தலில், 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., இந்த முறை, 66 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த முறை பெற்ற, 36 சதவீத ஓட்டுகளையே, இம்முறையும் பெற்றுள்ளது.
கடந்த முறை, 80 தொகுதிகளில் வெற்றி பெற்று, 38 சதவீத ஓட்டுகளை பெற்ற காங்கிரஸ், இம்முறை, 5 சதவீதம் கூடுதலாக, 43 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, 2018ல், 18 சதவீத ஓட்டுகளை பெற்று, 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை, 5 சதவீத ஓட்டுகளை இழந்து, 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
இதைப் பார்க்கும் போது, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் எந்த விதத்திலும் குறையவில்லை. அதேநேரத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின், 5 சதவீத ஓட்டுகள் தான், காங்கிரஸ் கட்சிக்கு சென்றிருக்கின்றன என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவும் காரணம்.
பெண்களுக்கு மாதம், 2,000 உதவித்தொகை, மகளிருக்கு இலவச பஸ் பயணம், வீடுகளுக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை என, சகட்டு மேனிக்கு காங்கிரஸ் வாரி வழங்கிய இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளே, அக்கட்சிக்கு, 5 சதவீத ஓட்டுகள் கூடுதலாக விழக் காரணம்.
எனவே, கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட தோல்வி, பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த தோல்வியல்ல!
வாசகர் கருத்து (55)
இலவசங்களுக்கு கிடைத்த வெற்றி. ஏமாற்றுவதில் திமுகவை பின்பற்றும் காங்கிரஸ்.
மோடி தலைமைக்கு கிடைத்த தோல்வியல்ல,
மெடல் கொடுத்தா எனக்கு.
முஸ்லிம் மக்கள் எல்லோரும் காங்கிரஸ் க்கு ஒட்டு போடுவதில்லை அவர்கள் காங்கிரஸ் யும் முழுவதும் நம்புவதில்லை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 15 முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது உள்ளனர்
மோடி ரோட் ஷோ பிலிம் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. போன முறை வெற்றி பெற்றது 104. இப்போ ஷோ காட்டியும் கிடைத்தது வெறும் 66. கிட்டத்தட்ட 40% சீட்டு குறைந்து விட்டது. அது எந்த 40% ன்னு கர்நாடக மக்கள் அறிவார்கள . நீ மக்கள் கிட்டேருந்து திருடினே, மக்கள் உங்கிட்டேருந்து 40% சீட்டை பிடுங்கிட்டாங்க.