"கள்ளச்சாராயம் அற்ற தமிழகத்தை உருவாக்குக": கமல் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தை கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கமல் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.

இது போன்ற கோர சம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பல நேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம். இப்போது அப்படியில்லாமல் தமிழக காவல்துறை, கள்ளச்சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணை போவோர் உள்ளிட்ட அனைவர் மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (45)
அட பாவமே. சாராயம் இல்லாத தமிழ்நாடு என்று சொல்லுவார் என்று பார்த்தால் கள்ள சாராயம் இல்லாத தமிழ்நாடு என்கிறார் உலக நாயகன். அட திமுக வுக்கு நெருங்கிடார்
ஹாஹா ஏன் மிஷநரி ஊளையிடுது பிக் பாஸ் புட்டுக்கிச்சா
அப்படியா கமால் ஜீ? "கள்ளச் சாராயமற்ற தமிழ் நாட்டை உருவாக்குக" இதை அப்படியே ஏற்றுக் கொண்டுதானே ஸ்டாலின் "அக்மார்க் நல்ல சாராயத்தினை அள்ளி அள்ளி ஊற்றுகிறார்? கல்யாண மணடபம் சந்தை, காய்கறி மார்க்கெட், பள்ளிக் கூடம், கல்லூரி, திரையரங்குகள், கோவில் இங்கெல்லாம் சாராரத்தைத் தாராளமாக் அவிற்கச் சொல்வதும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகத் தானேய்யா? "சாராயத்தை அடியோடு ஒழி" என்று ஆண்பிள்ளையாகச் சத்தமாகச் சொல்ல வக்கில்லை உமக்கு அவ்வளவிற்குத் தேறுதல் நிதியைத் தேற்றி இருக்கிறீர்
டாஸ்மாக் மது அருந்தி இறந்தால் விடியல் அரசு 20 லட்சம் தர வேண்டும். அதையும் துறை மந்திரியும், உள்துறை மந்திரியும் அவர்கள் சொந்த பணத்தில் இருந்து தர வேண்டும்.
அதென்ன கள்ளச்சாராயம் விற்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார். ஓஓஓ 1500 பேர் கைதாகியு ள்ஏனரே அவர்களுக்கு ஜாமீன் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறாரோ. மேலும் ஒன்று இரண்டு மூன்றெல்லாம் அதிகம் என்று சொல்லவில்லையே