Load Image
Advertisement

அதிமுக விதிகளை இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடில்லி: அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Latest Tamil News


அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் 'கடந்தாண்டு ஜூலை, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்த விதிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என, வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு படி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும், அதிமுக.,வில் திருத்தப்பட்ட விதிகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து, அதிமுக.,வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீங்கி, பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

Latest Tamil News

பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து இன்று(மே 16) இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

கூட்டம்



சென்னையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.



வாசகர் கருத்து (13)

  • சோழ நாட்டு மணி -

    0 ....

  • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

    குப்பார விழுந்தவனுக்கு குபீர்னு அடிச்சதாம் யோகம் .. என்பது போல பழனிசாமி முதல்வர் பதவி , எதிர்கட்சி தலைவர் இன்று பொதுச்செயலாளர் .

  • Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா

    ADMK downfall s now....

  • ஆரூர் ரங் -

    அப்படியே மூடுவிழா தேதியை😉 அறிவித்திருக்கலாம்.

  • S.L.Narasimman - Madurai,இந்தியா

    கட்சிதொண்டர்கள் அனைவரின் ஆதரவு எடைப்பாடியாருக்குதான் இருப்பதை தெரிந்தும் இத்தனை வருடம் அங்கீகரிக்காமல் கடத்திய தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்ச செயல் கண்டிக்கதக்கது. கேவலமானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement