Load Image
Advertisement

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

புதுடில்லி: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லாததால், திரையரங்க உரிமையாளர்களே படத்தை நிறுத்தி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Latest Tamil News


இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி படம், கடந்த 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது. தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதிக்கவில்லை என்றாலும், இப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து, தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து, அம்மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். திரையரங்குகள் தாக்கப்படுவதை, அரசு வேடிக்கை பார்க்க முடியாது. என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

Latest Tamil News

இது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று(மே 16) பதில் அளித்தது. அப்போது தமிழக அரசு கூறியதாவது: தமிழக அரசு, கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட 19 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. படத்துக்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களே வேறு படத்தை திரையிடுவதாக கூறினார்கள். திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை. இவ்வாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.


வாசகர் கருத்து (66)

  • ரமேஷ் -

    அப்பேர்ப்பட்ட எம் ஜி ஆரின் படத்திக்கே திரையரங்கை கொடுக்க மறுத்த கட்சி அல்லவா..

  • ஆக .. - Chennai ,இந்தியா

    படத்தின் பெயரை மாற்றி " கேரளாவில் உய்யலாலா " அல்லது தம்புராட்டினு பெயர் வெச்சு 11 மணி காட்சியா திரையிட்டா ..

  • Vijay - Chennai,இந்தியா

    திமுக உயிருக்கும் உடலுக்கும் கெடு

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    நாடு முழுவதும் ஒரு வாரத்தில் நூறு கோடி படம் எப்படி சம்பாதித்தது?

  • hariharan -

    நேற்று வரை இப்படத்திற்கு வருமானம் ரூ.146.74 கோடி. எப்படி இந்தப் படத்திற்கு வரவேற்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்