ADVERTISEMENT
புதுடில்லி: '' இந்தியா ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி பேசியதாவது: முன்பு அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது கடினமாக இருந்தது. விண்ணப்ப படிவம் வாங்கவே நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். இன்று அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளன. குரூப் சி மற்றும் டி பிரிவுகளுக்கு நேர்முகத்தேர்வு நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தின் கொள்கையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது ஆகும். கடந்த 9 ஆண்டுகளில், இதற்காக மத்திய அரசு மூலதன செலவாக ரூ.34 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. ராக்கெட் வேகத்தில் இந்தியா வளர்ந்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் புதிய துறைகள் வளர்ந்து வருகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்கவே ரோஜர் மேளா. தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி. ஊழலில் ஈடுபடுபவர்கள் வேரறுக்கப்பட்டு வருகின்றனர். வளர்ச்சியை நோக்கி இந்தியா பணியாற்றி வருகிறது. புதிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் கட்டப்பட்டு உள்ளன. 20 ஆயிரம் கி.மீ., தூர ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
வாசகர் கருத்து (18)
கள்ளசாராயம் குடிச்ச பத்து லட்சம் கிடைக்கும்...... இந்த பக்கம் எவனையும் காணோம்....எல்லாம் நேஷனல் லெவலதான் பேசுவீங்களோ....
திராவிட மாடல் கண்ணாடி மாட்டிக்கொண்டு பார்த்தால் வளர்ச்சியும் தெரியாது ஒரே வருடத்தில் 30000 கோடி ரூபாயை ஆட்டய போட்டதும் தெரியாது . கள்ளச்சாராயம் எப்போதும் தெரியாது .
இப்படியும் சொல்லலாம் ராக்கெட் வேகத்தில் ஜவுளி தொழித்துறை வீழ்ச்சி....
மக்கள்தான் அந்த ரோடில் பயணிக்கவில்லை. அதனால்தான் ஆளில்லா இடங்களிலும் கையசைத்து ஒருசிலர் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Modiji and his must act to win 2024 Mp election. Due to GST taking huge amount from common man and the fuel loan should have been cleared now. so the petroleum product cost must bring down .The gas subsidy must come in force. If these area taken into the account than the result for MP elections will be fruitful one for BJP.