ADVERTISEMENT
பெங்களூரு: கட்சி தான் எனக்கு முக்கியம். கட்சியே எனது கோயில் என கர்நாடக மாநில காங்., தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்து முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. இருவரது ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தத்தை துவக்கி உள்ளனர். சித்தராமையா டில்லி சென்றுள்ள நிலையில், சிவக்குமார் இன்று டில்லி செல்கிறார். அவர்கள் எங்கு சென்றாலும், மீடியாக்களும் பின்தொடர்கின்றன.
இந்நிலையில், டில்லி கிளம்பிய சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை. அதற்கான தகுதி இருந்தால் எனக்கு கிடைக்கும். யாரையும் வெறுக்க மாட்டேன். கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை கேப்பேன். கட்சி தான் எனக்கு முக்கியம். கட்சியே எனது கோயில்.

லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது அடுத்த இலக்கு. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் பிளவு ஏற்படுத்த விரும்பவில்லை. பொறுப்பான நபரான நான் யார் முதுகிலும் குத்தவும், யாரையும் மிரட்டவும் விரும்பவில்லை. தவறான வரலாற்றை எழுதவும் மாட்டேன். மோசமான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்த மாட்டேன்.
சோனியா தான் எங்களுக்கு முன்னுதாரணம். அனைவருக்கும் காங்கிரஸ் ஒரு குடும்பம் போன்றது. நமது அரசியல்சாசனம் மிகவும் முக்கியம். அனைவரின் நலனுக்காக அதை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.
வாசகர் கருத்து (36)
இப்ப காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் CM போஸ்ட் தனக்கு வேண்டும் நு சண்டை போடுகிறார் அவரு ஆதரவு தொண்டர்கள் ரோட்டில் வந்து போராட்டம் பண்றாங்க ஹா ஹா ஹா நாங்க ஒரே ஹேப்பி
சிவகுமார் பிஜேபி ல் சேருவது உறுதி இப்ப பரமேஸ்வர் தனக்கு CM போஸ்ட் வேண்டும் என்று போட்டி போடுகிறார்
கடந்தமுறை,எடியூரப்பா போல பிச்சுக்கிட்டு போய்டுவாருன்னு நெனச்சவங்களுக்கு பதில்....
ஒரு அப்பம்,இரண்டு பூனைகள்.ஒரு குரங்கு. ஒரு முதல் மந்திரி,இரண்டு சித்தா,சிவா.ஒரு கார்கே. அப்பம் யாருக்கு என்று குழந்தைகளை கேட்டால் கூட சொல்லுவார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பிஜேபியின் கனவை தகர்த்து விட்டாரே? வேறு வழி இல்லாமலா போய் விடும்?