Load Image
Advertisement

சிம் பொருத்தப்பட்ட மீட்டரால் எல்லாமே இனி சிம்பிள்

மதுரை: தமிழகம் முழுவதும் 'ஸ்மார்ட் மீட்டர்' அமைப்பதற்கான பணிகளை மின்சார வாரியம் தீவிரமாக செய்து வருகிறது.
மின்சார உற்பத்தியையும் அதன் உபயோகத்தையும் ஒப்பிடுகையில் பல்வேறு வேறுபாடுகள் வருகின்றன. மின் திருட்டு, மீட்டரில் ஏற்படும் பழுதால் மின்கணக்கீட்டில் பாதிப்பது, தொழில்நுட்ப இழப்புகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனை சரி செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

Latest Tamil News


இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக 'ஸ்மார்ட் மீட்டர்' வருகிறது. 'சிம்' பொருத்தப்பட்ட மீட்டர் மூலம் ஒவ்வொரு நுகர்வோரின் மின்சார உபயோகம் பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. மீட்டரில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் நுகர்வோரின் 'ஸ்டேடஸ்' பதிவு செய்யப்படும். இதனால் நுகர்வோர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டாலும் பதிவுகள் மூலம் தகவல்கள் எடுக்கலாம். இந்த அம்சங்கள் பழைய மீட்டரில் இல்லை. இதனை வாரியமே பொருத்துகிறது.

தனிப்பட்ட நுகர்வோர் அல்லது ஒட்டுமொத்த நுகர்வோரின் தகவல்கள் கொண்டு பயன்பாட்டை கணக்கிடலாம். மின்சாரத்தை துண்டிக்கவும் நேரடியாக வீட்டிற்கு ஊழியர்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மின் கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலைக் கொண்டு துண்டிப்பதற்கான அறிவிப்பை கொடுத்தால் தாமாகவே செய்துவிடும்.

தற்போது 'போஸ்ட் பெய்டு' திட்டம் கொண்டுவரப்படும். பின்னர் 'பிரீ பெய்டும் நடைமுறைக்கு வரும். நுகர்வோருக்கு அவர்கள் உபயோகித்த மின் அளவு, கட்டணம் செலுத்த இறுதி நாள் ஆகியன குறுஞ்செய்தியாக வரும்.
மதுரை மின்சார வாரியத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பொறியாளர்களுக்கும் இதன் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


வாசகர் கருத்து (3)

  • M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

    இது போன்ற தொழில் நுட்பம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பே போட்ஸ்வானாவில் வந்து விட்டது. ப்ரீபெய்ட் மீட்டர்தான். நாம் போனிற்கு ஏர்டைம் வாங்குவது போல மின்சார யூனிட்கள் எந்த கடையிலும் வாங்கி கொள்ளலாம். யூனிட்கள் தீர்ந்தால் கரண்ட் ஆட்டோமெட்டிக்காக கட் ஆகி விடும். அவரசத்திற்கு 10 யூனிட் கடன் கிடைக்கும். 2002 லில் நான் இந்த வகை மீட்டரை உபயோகித்திருக்கிறேன். டெக்னலாஜியில் நாம் இருவது வருடம் பின் தங்கி உள்ளோம் என்பதுதான் உண்மை.

  • N. Srinivasan - Chennai,இந்தியா

    இந்த மீட்டரில் வீட்டில் உட்காந்தபடியே கணினி அல்லது கைபேசி மூலமாக உடனுக்குடன் எவ்வளவு மின்சாரம் உபயோகப்படுத்தி உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள வசதி உள்ளது என கேள்விப்பட்டேன் ஆனால் எவரும் அதற்கான வழி சொல்ல முடியவில்லை. அப்படி இருந்தால் நாம் குறிப்பிட்ட அளவுக்கு மேலே போனால் சிக்கன நடவடிக்கை எடுத்து கொள்ளலாம் தினமலர் கேட்டு சொல்லும் என எதிர்பார்க்கிறேன் இப்போதைக்கு நான் மீட்டர் பார்த்து தெரிந்து கொள்கிறேன் (பழைய மீட்டர் போல்)

  • G Mahalingam - Delhi,இந்தியா

    Smart Meter financing by Central government on free of cost. Fixing meter also free of cost.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்