Load Image
Advertisement

விவாகரத்துக்கு பொது சட்டம் வேண்டும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி வழக்கு

Cricketer Mohammed Shamis wifes case requires common law for divorce    விவாகரத்துக்கு பொது சட்டம் வேண்டும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி வழக்கு
ADVERTISEMENT


புதுடில்லி,:பாலினம், மதம் பேதமில்லாத அனைவருக்குமான பொதுவான விவாகரத்து சட்டத்தை இயற்ற உத்தரவிடக் கோரி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும், அவரது மனைவி ஹசின் ஜகானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஷமி மீது பாலியல் உட்பட பல புகார்களை ஜகான் கூறி வருகிறார். விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Latest Tamil News
இந்நிலையில் ஹசின் ஜகான், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், அவர் கூறிஉள்ளதாவது:

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், மிகக் கொடூரமான விவாகரத்து முறையால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

முஸ்லிம் பெண்ணின் கருத்தை கேட்காமல், அவர்களது தரப்பை தெரிவிக்க வாய்ப்பு தராமல், தன்னிச்சையாக ஆண்களால் விவாகரத்து செய்ய முடியும்.

'தலாக்' நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டாலும், இது பல வடிவங்களில் உள்ளது. இந்த விவாகரத்து முறைகள் சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும்.

அரசியல் சாசனம் அளித்துள்ள சம உரிமையை உறுதி செய்யும் வகையில், பாலினம் மற்றும் மத பேதமில்லாமல், அனைவருக்கும் பொதுவான விவாகரத்து சட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான மற்ற வழக்குகளுடன் இணைத்து இதை விசாரிப்பதாக அமர்வு குறிப்பிட்டுள்ளது.


வாசகர் கருத்து (11)

  • sridhar - Chennai,இந்தியா

    லதாக், லதாக், லதாக் என்று சொல்லி ஆண்களை விவாகரத்து செய்யும் சட்டம் அவசியம் , அவசரம்.

  • அப்புசாமி -

    முதல்ல முக்காடை எடுத்து போட்டுட்டு நான் அந்த மதம் இல்லைன்னு சொல்லிட்டு பொதுசட்டம் கேளுங்க.

  • Dhandapani - Madurai,இந்தியா

    அதுதானே நீ என்னடா தலாக் சொல்லுறது பெண்கள் நாங்களே உனக்கு சொல்றோம் தலாக், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தூம் பாரதி வரிகள் செயலுக்கு அவரது, கழியும் முத்திடுது

  • N.Gajendran - Chennai,இந்தியா

    மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயன்றும், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக வரவிடாமல் தடுக்கின்றன. கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் வந்தே தீரும் என நம்புகிறேன்

  • raja - Cotonou,பெனின்

    இப்படி சொல்லுங்க ஆனா பாதிக்கபட்ட முஸ்லிம் பெண்கள் கூட இந்த சட்டத்தை கொண்டுவர முயலும் பிஜேபி க்கு ஒட்டு போட மாட்டீங்களே...அப்போ மட்டும் உங்களுக்கு மதம் பெரிசா போயிடுதே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement