Load Image
Advertisement

கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவருக்கும் போட்டி: காங்கிரசை போல் பா.ஜ.,விலும் சிக்கல்?

Competition for Leader of Opposition in Karnataka; Like the Congress, the BJP also has a problem?   கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவருக்கும் போட்டி: காங்கிரசை போல் பா.ஜ.,விலும் சிக்கல்?
ADVERTISEMENT

பெங்களூரு: கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு பொம்மைக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்., 135 பா.ஜ., -66 எம்எல்ஏக்கள் வென்றுள்ளனர். பெரும் மெஜாரிட்டியுடன் காங்., ஆட்சி அமைக்கிறது. இங்கு இன்னும் முதல்வர் யார் என்று முடிவாகவில்லை.

இந்நிலையில் பா.ஜ., தரப்பில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பு யாருக்கு வழங்கலாம் என பா.ஜ., மேலிடம் யோசிக்க துவங்கி உள்ளது. முதல்வராக இருந்த பொம்மைக்கு கட்சி அளவில் செல்வாக்கு சரிந்தததாகவே கூறப்படுகிறது. தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பொம்மையின் நிர்வாகத்தில் சற்று குறைவு இருந்ததாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும் பெருவாரியான லிங்காயத் இனத்தை சேர்ந்தவருக்கு பிரதிநித்துவம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

எதிர்கட்சி தலைவர் பொறுப்பு போட்டியில் பொம்மை, அசோகா, பசன்கவுடாபாட்டில் , சுனில்குமார் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. பசன்கவுடாபாட்டில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர், மேலும் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதிலும் பேச்சிலும் வல்லவர். கர்நாடகாவில் அதிகம் உள்ள இந்த சமுதாய மக்களை திருப்திப்படுத்த இவருக்கு வழங்கப்படலாம்.

அடுத்து சுனில்குமார், இவர் ஆர்எஸ்எஸ், இயக்கத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். கடலோர மாவட்டங்களில் தனி செல்வாக்கு உண்டு. அசோகா என்பவரை பொறுத்தவரை , ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர். பா.ஜ., ஆட்சி வந்தால் எப்போதும் அமைச்சராவார். 7 முறை எம்எல்ஏ.,வாக இருந்தவர். துண முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். அநுபவம் உள்ள இவருக்கும் எதிர்கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (11)

  • gopalasamy N - CHENNAI,இந்தியா

    Cong will win 450 seats in Parliament raghul pm mamtha stalin kejirival nithis etc as dy pm china pakisthan will help india to become super power

  • அப்புசாமி -

    இரட்டைத் தலைமை வெச்சு தர்மயுத்தம் நடத்தலாமே..

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    2024 வரை கட்சி இருக்குமா?

  • Indian - Vellore,இந்தியா

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகும் பிஜேபி இல் எதிர் கட்சி தலைவருக்காக போட்டி இருக்கும் மோடியா அமித்ஷாவா என்று

  • venugopal s -

    பாஜக காங்கிரஸ் இரண்டும் திமுக அதிமுக போல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான், என்ன இவை தேசிய மட்டைகள் அவ்வளவு தான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்