ADVERTISEMENT
சென்னை: கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1558பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் கள்ளச்சாராயத்தை விற்றுக்கொண்டு இருந்தார்களா என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச் சாராயத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
மேலும் சிலர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை கண்டுபிடித்து அழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும், ஆலை, மருத்துவமனை, ஆய்வகத்தில் உள்ள மெத்தனாலை பயன்படுத்தி கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து டி.ஜி.பி. கூறியது, தமிழகம் முழுவதும் போலீசார், இரண்டு நாட்களாக தீவிர, கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.
கடந்த இரண்டு நாட்களில், 1, 842 வழக்குகள் பதியப்பட்டு, 19, 028 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. 4,943 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட, 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (32)
இவ்வளவு கடைகளில் காவல்துறையின் வருமானம் பல கோடி. இதற்கு பிச்சை எடுக்கலாம்
இதுதான் திராவிட மாடல் அரசு. இவ்வளவு நாட்களாக தூங்கி கொண்டு இருந்தார்களா.
(மாமூல் ) டேட்டாபேஸ் போலீஸ் கையில் ரெடியாக இருந்திருக்கும். அதனால் தான் உடனே கைது செய்ய முடிந்தது ..
ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை ....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்நாட்டில் கள்ளச் சாராய பார்களையும் அரசே திறக்கலாம், மக்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் லட்சக்கணக்கில் நிவாரணமும் கொடுக்கலாம்....