புதுடில்லி: கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, பஜ்ரங் தள் அமைப்பு குறித்து பேசியதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
இதற்கு பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் பிரசாரத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை போன்று பஜ்ரங் தள் அமைப்பை நிச்சயம் தடை செய்வோம்' எனப் பேசியிருந்தார்.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ உடன் பஜ்ரங் தள் அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதாக ஹிந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், மல்லிகார்ஜூன கார்கே மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் கார்கேவுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
வாசகர் கருத்து (5)
இந்த கார்கே மிகுந்த அகம்பாவம் பிடித்தவர். இவரிடம் ரூபாய் ஐம்பதாயிரம் கோடிகள் எப்படி வந்தது?
அவதூறு தான். நீதிமன்றம் நாடுவதை குறைத்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை வழி நடத்தி வருகின்றனர். தடை செய்யும் போது நீதிமன்றம் நாடுங்கள். நீதிமன்ற வழக்கு மிக பெரிய எதிர் வினை ஏற்படுத்தி விடும். ஊழல் வாதிகள் மீது பல மீடியா, வழக்கறிஞர்கள் ஆதரவு உண்டு. அவர்களால் யானையை பூனை ஆக்க முடியும். திரு. கார்கே, காங்கிரசார் அனுதாபம் பெற்று விடுவர். பாதிப்பு பிஜேபி கட்சிக்கு தான்.
காங்கிரஸ் போன்று மதவாத பிரச்சாரம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அங்கும் இங்கும் ஒன்றோ இரண்டோ வெற்றி கிடைக்கும். அவர்களே உட்கட்சி பூசலால் கெடுத்துக் கொண்டு பாஜகவை அரியணையில் அமர்த்துவார்கள்
இதன் விளைவை விரைவிலேர் கார்கே கண்டுபிடுவார். இது இந்துநாடு இருண்தகுக்கல் இல்லாமல் இந்தியா கிடையாது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ உடன் பஜ்ரங் தள் அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதால் கார்கே காணப்போவது என்னவாகும் இனி கர்நாடகாவில் மத சண்டைகள் அதிகமாகும் கட்டுக்கடங்காது. கார்கே வக்காளத்து பேசிய சமுதாய மக்கள் இனி அவர்களது ஆட்களே முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஆக வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தாலும் செய்யலாம். வாய்க்கொழுப்பினால் வந்த விபரீதம்
இதன் மூலம் அவர் சொல்ல வருவது - பிஎஃப்ஐ - மீதான தடை சரிதான் என்று செல்லாமல் சொல்கிறார் ?