Load Image
Advertisement

"பொம்மை முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்": பழனிசாமி வலியுறுத்தல்


திருச்சி: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொம்மை முதல்வர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Latest Tamil News

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பழனிசாமி அளித்த பேட்டி:



மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. ஒரு பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிற காரணத்தினால், இப்படி கொடுமைகள் எல்லாம் மக்கள் சந்திக்கின்றனர்.

கள்ளச்சாரயம் குடித்து பலர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. மரக்காணம் அருகே கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பதினரை நாளை நேரில் சந்தித்து ஆலோசனை கூற உள்ளேன்.

சட்டசபையில் நான் போதைப்பொருள்கள் தடுப்பு குறித்து
பேசி இருந்தேன். அப்போதே முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாரயம் விற்பனையை தடுத்து இருந்தால், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு இருந்திருக்காது. இதனால் ஸ்டாலின் தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் முதல், கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை தொடர்ந்து நடந்து வருகிறது. கஞ்சா விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. டிஜிபி சைலேந்திர பாபு 2.0 கஞ்சா வேட்டை மற்றும் 4.0 என்ற திட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் தமிழகத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. கஞ்சா ஒழிப்பு 2.0, 3.0, 4.0 என ஓ போட்டு கொண்டிருக்கின்றனர்.

500 மதுபான கடைகளை மூடுவதாக சொல்லி ஆயிரம் கடைகளை திறக்கிறார்கள். 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் பார் திறந்து உள்ளது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் திறந்து இருந்தது. தானியங்கி முறையில் மது விற்பனையை துவக்கி உள்ளனர். விளையாட்டு மைதானம், திருமண மண்டபத்தில் கூட மதுப்பானத்தை விற்பனை செய்யலாம் என அரசு கூறியுள்ளது.

Latest Tamil News

திருமண மண்டபத்தில் மது அனுமதி கொடுத்து, திருமணங்களை ஒழுங்கா நடக்க முடியாமல் தடுக்கப்படுகிறது. மதுவிற்பனையை ஊக்குவிக்கும் அரசாக இந்த திமுக அரசு விளங்குகிறது. ஆகவே இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். திமுக அமைச்சர்கள் தினந்தொறும் இப்படி பட்ட செய்திகள் வருவதால் செய்தியாளர்கள் சந்திப்பை புறங்கணிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (34)

  • R Kay - Chennai,இந்தியா

    ரெண்டு கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். உங்கள் ஆட்சியில் மட்டும் என்ன பாலாறும், தேனாறுமா ஓடிற்று? சாராய அதிபர்கள் இரண்டு கட்சியிலும்தானே இருக்கின்ரீர்கள்? குட்கா உங்கள் ஆட்சியிலும் பஞ்சமில்லாமல் கிடைத்தது. எங்கள் தலைவிதி உங்களிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றோம்.

  • Kumar - Newyork,யூ.எஸ்.ஏ

    விடியா மூஞ்சி பழனி, உன்னுடைய வண்டவாளம் / அடிமை ஆட்சியை 10 ஆண்டுகளில் பார்த்தோமே.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தால் எல்லாம் பொம்மை என்று பாடிக்கொண்டே தமிழக முதல்வரும் கர்நாடக பழைய முதல்வரும் செல்லலாமே இதுதானய்யா பொம்மை அரசாங்கம்

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    கூவத்துர் ஹொட்டலில் தேர்வானவர்கள் ராஜினாமா பற்றி பேசலாமா என்று அண்ணன் திரு ஜெயக்குமார் சார் தான் சொல்லணும்.

  • Ram - Dindigul,இந்தியா

    Did this guy resign after Kodanadu Estate incident and also Tuticorin shootings incident? Both the incidents were instigated by this most corrupted guy He has no right to say about others?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்