டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை வரவேற்க அவரது இல்லத்தில் ஏராளமான காங்., தொண்டர்கள் குவிந்தனர். பின்னர் காங்கிரஸ் தலைவர் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக மக்கள் பாஜ.,வை நிராகரித்து காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.
மக்கள் காங்கிரசிற்கு வரலாறு காணாத ஓட்டுக்களை வழங்கியுள்ளனர். எங்களது மேலிட பார்வையாளர்கள் பெங்களூரு சென்றுள்ளனர். அவர்கள் சென்றடைந்தவுடன் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும்.
இவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, முதல்வர் நியமனம் குறித்து தங்களது கருத்தை கட்சி மேலிடத்தில் பகிர்ந்து கொள்வார்கள். பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (11)
. உங்க ராகுல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமத்திய அரசிடம் கை ஏந்தனும் அல்லது உங்க மாநிலத்துக்கு தனியாக நோட்டு அடிக்கும் உரிமம் பெற வேண்டும். அரசு பஸ்களில் மகளிருக்குஇலவச பயணம் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கும் பொருந்துமா. இங்க வாந்தி எடுத்தா மாதிரி கலர் அடிச்சிருக்காங்க..... அங்கேயாவது நல்ல கலரா அடியுங்க.....
காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ரேஷன் கார்டில் உள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் 10 கிலோ அரிசி மாதாமாதம் வழங்கப்படும் என்றும், வேலை இல்ல பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூ, இல்லத்து அரசிகளுக்கு மாதம் ரூ 2000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ 1500 வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எங்கேயிருந்து இவர்களுக்கு பணம் வரும்? கர்நாடகத்தில் 100000 லட்சம் பேர்களுக்கு என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு மாசத்துக்கு (100000 2000 + 100000 3000 + 100000 1500) .....அப்ப்பா தலை சுத்துகிறது. மக்களை முட்டாளாக்கி விட்டார்கள்........
குருவி தலையில் பனங்காய் ....
அப்படியா...???
கட்சி மேலிடம்னா யாரு ? அப்ப இவர் இல்லையா ? ஹி ஹி ..........................