விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த சங்கர், சுரேஷ், தரணி வேல் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்த கோரி கிழக்க கடற்கரை சாலையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என அவர்கள் கூறியதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சஸ்பெண்ட்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை இன்ஸ்பெக்டர் மரிய ஷோபி மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிவாரணம்:
கள்ளச்சாராயம் குடித்து, உயிரிழந்த3பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். கள்ளச்சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய குற்றவாளிகை தேடும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வாசகர் கருத்து (35)
சுத்த கிறுக்குத்தனமாக இல்லையா முதல்வரே? இப்படி கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நல்ல வருமானம் என்று ஏழை மக்கள் நினைக்கலாமல்லவா?
தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை இனித் தாறுமாறாக அதிகரிக்கும்....
ஸ்டாலின்தான் வராரு நல்லாச்சி தரப்போறாரு அதுதான் அதுதான் மக்களோட தலையெழுத்து.
இதில் பெண்கள் யாரும் இல்லையே ...
நேத்திக்கிதான் புதுசா கள்ளச்சாராயம் குடிக்கிற மாதிரி பேசுறாங்க. குடிக்கிறது வெஷம்னு தெரிஞ்சு குடிக்கிறவங்களுக்கு எதுக்கு அரசு நிவாரணம்? தளபதியின் சிந்தக் காசிலிருந்து குடுக்க வேண்டியதுதானே? இனிமே குடும்பமே கள்ளச்சாராயத்தை வாங்கி ஊத்தி நிவாரணம் வாங்கிரும். சும்மாவா? 10 லட்சம் ஆச்சே.